Xiaomi 13 Pro: பிரீமியம் லுக்கில் ஜியோமி 13 ப்ரோ மொபைல்கள்… வேரியண்ட், விலை மற்றும் முழு விபரங்கள்!

ஜியோமி நிறுவனம் தனது 13 சீரிஸ் மொபைல்களை முன்பே சீனாவில் வெளியிட்டிருந்தது. தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இதை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக அளவில் 1.13லட்சம் வரை விற்கப்படும் இந்த மொபைலின் இந்திய விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வருடத்தில் ஜியோமி நிறுவனத்தின் உயர்ரக மொபைலாக இது கருதப்படுகிறது. இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்பதை பார்க்கலாம்.

ப்ராசஸர் (Processor)

ஜியோமி 13 ப்ரோவில் புத்தம்புது Qualcomm Snapdragon 8 Gen 2 SoC ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மல்டி டாஸ்கிங், அதிவேக செயல்பாடு, நீடித்த உழைப்பு என பலவற்றை தாங்குவதற்கு ஏற்றவாறும், 2K ஹிட்ஸ்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 12GB ரேம்(RAM) மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே (Display)
பயனர்களின் ஸ்க்ரீன் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக 6.7 இன்ச் LTPO OLED டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. 120Hz Refresh rate வழங்கப்பட்டுள்ளது.

கேமரா (Camera)
ஜியோமி 13 ப்ரோவில் 50MP சோனி IMX989 1-இன்ச் சென்சார் , 50MP டெலிபோட்டோ லென்ஸ், 50MP அல்ட்ராவைட் லென்ஸ், 32MP செல்ஃபீ கேமரா ஆகியவை பொறுத்தப்பட்டுள்ளன. இந்த மொபைலில் பொருத்தப்பட்டுள்ள பலவிதமான சென்சார்களுக்காகவே இதன் மீதான எதிர்பார்ப்பும் எகிறி கொண்டிருக்கிறது.

பேட்டரி (Battery)
இந்த மாடலில் 4,820mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் பயன்பாட்டை பொறுத்து நீடித்த உழைப்பை உறுதி செய்ய முடியும். அதே போல், சக்தி வாய்ந்த பேட்டரிக்கு ஏற்ற வகையில் 120W fast charging மற்றும் 50W wireless charging வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

Xiaomi 13 Pro-வின் கூடுதல் அம்சங்கள்!

இது MIUI 14 ஆண்ட்ராய்டு 13 வசதியில் இயங்கக்கூடிய மாடல்இதில் HDR10+ மற்றும் டால்பி சப்போர்ட் வசதி தரப்பட்டுள்ளது.செராமிக் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் மெலிந்த அமைப்போடு அட்டகாசமான பிரீமியம் லுக்கில் வெளியிடப்பட்டுள்ளது Xiaomi 13 Pro.தற்போதைக்கு அமேசான் உள்ளிட்ட தளங்களில் Xiaomi 13 Pro மொபைலை ஆர்டர் செய்ய முடியும். ஆனால், இன்னும் அந்த தளங்களிலும் அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வரவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.