திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி; ரூ.1,500 கோடியில் சென்னை MTC போட்ட மாடர்ன் ஸ்கெட்ச்!

தலைநகர் சென்னையில் உள்ள போக்குவரத்து நிலையங்களை சீரமைக்க மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாநிலம் முழுவதும் 16 பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

சென்னையில் 3 பேருந்து நிலையங்கள்அமைச்சர் தெரிவித்ததன் ஒருபகுதியாக சென்னையில் உள்ள திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய மூன்று பேருந்து முனையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை 1,543 கோடி ரூபாய் மதிப்பில் நவீனப்படுத்தப் படுகின்றன. மேற்குறிப்பிட்ட மூன்று பேருந்து முனையங்களிலும் வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
புதிய வசதிகள்தரைத்தளத்தில் பணிமனை, பேருந்து நிறுத்தங்கள், பயணிகள் ஓய்வறை, கழிப்பிடங்கள், குடிநீர் விநியோகம் செய்யும் யூனிட்கள் உள்ளிட்டவை அமைகின்றன. இதுதவிர தற்போதைய கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் புதுப்பிக்கப்படுகின்றன. இதன்மூலம் திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய மூன்று பேருந்து முனையங்களின் முகமே மொத்தமாக மாறப் போகிறது.

சென்னை மாநகராட்சி திட்டம்குறிப்பாக பெங்களூருவை முன்மாதிரியாக கொண்டு வர்த்தக பயன்பாட்டு தளங்களை வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதாவது, உணவகங்கள், கடைகள், ரீடெய்ல் வணிகம் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. மேலும் பேருந்து முனையங்களில் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பருவமழை முன்னேற்பாடுகள்இதன்மூலம் பருவமழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் பேருந்து நிலையங்கள் பாதுகாக்கப்படும். இத்தகைய வசதிகளை பொதுத்துறை மற்றும் தனியார் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி ஒப்பந்த புள்ளிகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள்இதில் தேர்வு செய்யப்படும் தனியார் ஒப்பந்ததாரர்கள் அடுத்த 30 ஆண்டுகளுக்கு பேருந்து நிலையங்களை பராமரிக்க வேண்டும். இந்நிலையில் நவீனப்படுத்தப்படும் மூன்று பேருந்து நிலையங்களிலும் வாகன நிறுத்தத்திற்கு போதிய இடவசதி செய்து கொடுத்தால் பயணிகள் வருகையை அதிகப்படுத்தலாம் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நஷ்டத்தில் போக்குவரத்து துறைஇந்த விஷயத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. எனவே பயணிகளை அதிகம் வர பேருந்து நிலையங்களை நவீனப்படுத்தி புதிய வசதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம்.

மெட்ரோவிற்கு போட்டிகுறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் சேவையை அடைய முடியாத பயணிகள், குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய விரும்பும் சாமானியர்கள் ஆகியோருக்கு மாநகரப் பேருந்துகள் மிகுந்த உதவிகரமாக இருந்து வருகின்றன. இந்த சூழலில் பேருந்து நிலையங்களை நவீனப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.