சிட்ரோன் eC3 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

இந்திய சந்தையில் குறைந்த விலையில் ஸ்டைலிஷான சிட்ரோன் eC3 எலெக்ட்ரிக் எஸ்யூவி ₹.11.50 லட்சம் முதல் ₹ 12.43 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள IC என்ஜின் மாடலின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் மின்கல மின்சார வாகனமாக மாற்றப்பட்டுள்ளது.

டாடா டியாகோ EV, டிகோர் EV மற்றும் வரவிருக்கும் MG ஏர் EV ஆகிய தொடக்கநிலை EV கார்களுக்கு மாற்றாக Citroen eC3 போட்டியாக அமைந்துள்ளது.

Citroen eC3

விலை அறிவிக்கப்பட்டுள்ள சிட்ரோன் eC3 எலெக்ட்ரிக் காரில் 29.2 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. 3.3kW ஆன்-போர்டு AC சார்ஜருடன் வருகின்ற இந்த மின்சார காரில் CCS2 முறையில் வேகமாக சார்ஜ் ஏறும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது. eC3 காரின் ஃபிரண்ட் வீல் டிரைவ் பெற்று இந்த காரில் உள்ள மின்சார மோட்டார் அதிகபட்சமாக 57 hp பவர் மற்றும் 143Nm டார்க் வழங்குகிறது.

சிட்ரோன் eC3 காரின் அதிகபட்சமாக ARAI சான்றளிக்கப்பட்ட 320 Km வரம்பை கொண்டுள்ளது.  ஈகோ மற்றும் ஸ்டாண்டர்ட் என இரண்டு டிரைவிங் மோடுகளை பெற்று கூடுதலாக பவரை சேமிக்க ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் பெற்றுள்ளது.

eC3 மின்சார கார் 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.8 வினாடிகள் போதுமானதாகும். மணிக்கு அதிகபட்ச வேகம் 107 கிமீ பயணிக்கலாம். இந்த காருக்கு DC ஃபாஸ்ட் சார்ஜரை கொண்டு சார்ஜ் ஏற்றினால் 57 நிமிடங்களில் 0 முதல் 80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். சாதாரன வீட்டு சார்ஜரில், பேட்டரி 10 மணி 50 நிமிடங்கள் எடுத்துக் கொண்டு 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

சிட்ரோன் நிறுவனம் ec3 காரின் பேட்டரிக்கு அதிகபட்சமாக  7 ஆண்டுகள் அல்லது1,40,000 கிமீ வாரண்டியையும், மின்சார மோட்டாருக்கு 5 ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ வாரண்டியையும், இந்த காருக்கு 3 ஆண்டுகள் அல்லது 1,25,000 கிமீ வாரண்டியையும் வழங்குகிறது.

Citroen eC3 Price chennai

Variants

IC Engine (C3)

EV (eC3) 

வித்தியாசம்

Live 

Rs 5.98 lakh

Rs 11.50 lakh

+ Rs 5.52 lakh

Feel

Rs 6.90 lakh

Rs 12.13 lakh

+Rs 5.23 lakh

Feel Vibe Pack

Rs 7.05 lakh

Rs 12.28 lakh

+Rs 5.23 lakh

Feel Dual Tone

Rs 7.05 lakh

Feel Dual Tone Vibe Pack 

Rs 7.20 lakh

Rs 12.43 lakh

+Rs 5.23 lakh

Feel Turbo Dual Tone Vibe Pack

Rs 8.25 lakh

All prices are ex-showroom pan-India

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.