மாதம் ரூ.15,000 தான் என் சம்பளம்! அதிர்ச்சி கொடுத்த பிரபல நிறுவனத்தின் சிஇஓ


பிரபல ஃபின்டெக் நிறுவனமான CRED-ன் தலைமை நிர்வாக அதிகாரி, தனது மாத சம்பளத்தை வெளிப்படுத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சிஇஓ மாத சம்பளம் ரூ.15,000

நிதி தொழில்நுட்ப நிறுவனமான CRED-ன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) குணால் ஷா (Kunal Shah), தான் மாத சம்பளம் ரூ.15,000 பெறுவதாகவும், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். இது இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

குணால் ஷா, ஞாயிற்றுக்கிழமை இன்ஸ்டாகிராமில் ‘என்னிடம் எதையும் கேளுங்கள்’ அமர்வை நடத்தினார். அதில் ஒரு பயனர் “CRED-ல் உங்கள் சம்பளம் மிகவும் குறைவாக உள்ளது? நீங்கள் எப்படி வாழ்வீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

மாதம் ரூ.15,000 தான் என் சம்பளம்! அதிர்ச்சி கொடுத்த பிரபல நிறுவனத்தின் சிஇஓ | Cred Ceo Kunal Shah Shocks Reveal Salary 15000Twitter @AdwaitChondikar

குணால் ஷா பதில்

அதற்கு பதிலளித்த குணால் ஷா, “நிறுவனம் லாபகரமாக இருக்கும் வரை எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. CRED-ல் எனது சம்பளம் மாதம் ரூ.15,000 தான் மற்றும் நான் கடந்த காலத்தில் எனது FreeCharge நிறுவனத்தை விற்றதால் தான் என்னால் வாழ முடிகிறது.” என்று கூறியுள்ளார்.

குணாலின் ஸ்டோரி ஸ்கிரீன் ஷாட்டை அஜீத் படேல் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஸ்கிரீன்ஷாட்டுடன் “கோடிகளில் சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளும் இருக்கிறார்கள், குணால் ஷா போன்ற ஒருவரும் இருக்கிறார்.” என்று கூறினார்.

பகிரப்பட்டதிலிருந்து, இந்த பதிவு 3,000-ற்கும் அதிகமான லைக்குகளையும் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் குவித்துள்ளது.

மாதம் ரூ.15,000 தான் என் சம்பளம்! அதிர்ச்சி கொடுத்த பிரபல நிறுவனத்தின் சிஇஓ | Cred Ceo Kunal Shah Shocks Reveal Salary 15000TEAM CRED

நெட்டிசன்கள் கருத்து

ஆனால், ஷாவின் இந்த பதில் இணையத்தைப் பிளவுபடுத்தியதாகத் தெரிகிறது. அவரது நடவடிக்கையை சிலர் பாராட்டினாலும், மற்றவர்கள் வரியைச் சேமிக்க இது ஒரு வழி என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒரு பயனர், குணால் ஷா ஒரு ஏஞ்சல் முதலீட்டாளர் (Angel Investor) என்றும் 500-க்கும் மேற்பட்ட Startup-களில் அவர் முதலீடு செய்துள்ளதாகவும், அதிலிருந்து அவருக்கு வருமானம் கிடைக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.