"இதுதான் திராவிட மாடல்." அயலி சீரிஸ் குறித்து அமைச்சர் பொன்முடி.!

கோலிவுட் திரையுலையில் தற்போதைய காலகட்டத்தில் திரைப்படங்களை தவிர்த்து வெப் சீரிஸ்க்கு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. பல வெப் சீரிஸ்கள் பெரிதாக பேசப்பட்டு வந்துள்ள நிலையில் தற்போது முத்துக்குமார் இயக்கிய அயலி என்ற வெப் சீரியஸ் ரசிகர்கள் மத்தியில் கருத்து பொருளாக பேசப்பட்டு உள்ளது.

Estrella stories தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் அபி நக்ஷத்ரா, அனுமொள், மதன், லிங்கா, சிங்கம் புலி, லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரேவா என்பவர் இசையமைத்து வினை மைந்தன், சச்சின் மற்றும் முத்துக்குமார்  ஆகியோர் சேர்ந்து அயலி சீரியஸின் திரைக்கதையை எழுதி உள்ளனர். இந்த சீரியஸ் ஸீ 5 வலைத்தளத்தில் 26 ஆம் தேதி ஜனவரி மாதம் வெளியானது.

அயலி வெப் சீரியஸ் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பேசப்பட்டு வருவதற்கு காரணம் இந்த சீரியல் பெண்களின் கல்வி, குழந்தை திருமண முறை போன்றவற்றை மையமாக வைத்து  பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும்  கதையாகும். இந்த படத்தில் அபி நட்சத்திரா நடித்திருக்கும் தமிழ்ச்செல்வி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

இன்று பாரதி மகளிர் கலை கல்லூரியில் பட்டமளிப்பு நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசியபோது, “இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் அயலி என்ற சீரிசை பார்த்தேன். ஒரு காலத்தில் நம்முடைய பாட்டியே பெண்களை பருவமடைந்தால் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று கூறியிருப்பார்கள். ஆனால் இப்போ அவர்கள் தான் பெண்கள் படிக்கவே ஊக்குவிக்கிறார்கள். இது தான் திராவிட மாடல்.”என்று பேசியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.