வெறுப்பு அரசியலை தூண்டி பாஜக அரசியல் ஆதாயம் தேடுகிறது: திருமாவளவன்

சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபுவை சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் பேட்டியளித்தார். தமிழகத்தில் வெறுப்பு அரசியலை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடையக் கூடிய வகையில் பாஜக செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

சமீபத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் தமிழக அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கி ஒரு வெறுப்பு அரசியலை வட மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் உருவாக்கிட பாஜக செயல்பட்டு வருவதாக குற்றம் அவர் குறினார். 

ஆரணியில் நடைபெற்ற ஒரு சம்பவம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள ஏழு பேரை கைது செய்ய காவல்துறையினர் ஏழு தனிப்படை அமைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி சென்ற காரை பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டு தகராறு செய்த நிலையில் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். வேங்கை வயல் விவகாரத்தில் சி பி சி டி போலீசார் உண்மையான குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள மக்களையே விசாரிப்பதாக தகவல் வந்த நிலையில் அது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது விசாரணை மட்டுமே நடைபெறுவதாக தெரிவித்ததாக கூறினார்.

பாஜகவினர் தங்களது வீடுகள் தங்களது கார்களை அவர்களே சேதப்படுத்திக் கொண்டு அவற்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்ததாக கூறி குற்றம் சாட்டுவதாக திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த 32 ஆண்டுகளாக அரசியலில் நெருக்கடியை சந்தித்து வந்துள்ள நிலையில் தற்போது அது வெற்றியாக இருக்கும் நிலையிலும் பாஜக தொண்டர்கள் மூலம் விசிகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.