சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில், வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில், இரு மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, கோஹிமா மாவட்டத்திலும், துணை முதல்வர் யந்துங்கோ பாட்டன் டியூயிலும் வாக்களித்தனர்.
நாகாலாந்தில் உள்ள வோகா மாவட்டத்தில் வாக்குமைய ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மலையிலிருந்து காட்டுக்குள் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துடன், 13 பேர் படுகாயமடைந்தனர். இரு மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது.