Tigers Death In India: தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) வெளியிட்ட தகவல்களின்படி, புலிகள் உயிரிழப்பு பொதுவாக ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிகரிக்கும் என தெரிகிறது. இந்த இறப்புகளில் பெரும்பாலானவை கன்ஹா, பன்னா, ரந்தம்பூர், பென்ச், கார்பெட், சத்புரா, ஒராங், காசிரங்கா, சத்தியமங்கலம் போன்ற புலிகள் காப்பகங்களில் பதிவாகியுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் இதுவரை 30 புலிகள் உயிரிழந்துள்ளன. புலிகள் காப்பகங்களில்தான் இதில், பாதி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த மரணங்கள் இயல்பானவை என்பதால் அச்சப்படத் தேவையில்லை எனவும் அதிகாரிகள் கருதுகின்றனர்.
30 இறப்புகளில் 16 மட்டுமே சரணாலயங்களுக்கு வெளியில் பதிவாகியுள்ளன. அதிக எண்ணிக்கையிலான புலி இறப்புகள், மத்தியப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 9 புலிகள் உயிரிழந்துள்ளன. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 7 புலிகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்ததில் ஒரு குட்டியும், மூன்று மத்திம வயது புலிகளாகும். மீதமுள்ளவை வயதில் மூத்த புலிகளாகும்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்,”ஜனவரி முதல் மார்ச் வரை புலிகளின் உயிரிழப்பு அதிகரித்திருக்கும். இந்த உயிரிழப்புகள் இயல்பானவை. மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில்தான் அதிக புலிகள் உயிரிழந்துள்ளன. அங்கு ஆரோக்கியமான புலிகளின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு, உயிரிழந்த புலிகளின் எண்ணிக்கையில் அச்சப்பட ஏதும் இல்லை. புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், இயற்கையாகவே இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளிலிருந்து, எந்த ஆண்டிலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் இறப்பதாக அறிகிறோம்.
புலிகள் தங்கள் எல்லையை விட்டு வெளியேறும் நேரம் இது. எனவே புலிகளுக்கு இடையே மோதல் உள்ளது. புலிகளுக்கிடையிலும் எல்லை மோதல்கள் உள்ளன. புலிகளின் எண்ணிக்கை 6% உயர்ந்துள்ளது, அதனால் இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும். புலி இறப்பு எண்ணிக்கையை சூழலுக்கு வெளியே எடுத்துக்கொள்வது தவறு. புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு புலியின் சராசரி ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும்,” என்று அதிகாரி கூறினார். இந்த ஆண்டும் புலிகளின் எண்ணிக்கையில் 6% வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
தரவுகளின்படி, அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் இயற்கையான காரணங்களால் நிகழ்ந்துள்ளன,. அதே நேரத்தில் வேட்டையாடுதல் இரண்டாவது பெரிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020இல் ஏழு உயிரிழப்புகள் வேட்டையாடுதலால் நிகழ்ந்துள்ளது. 2019இல் 17 வழக்குகளும், 2018இல் 34 வழக்குகளும் பதிவாகியுள்ளன.