சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 17-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் மார்ச் 20-ம் தேதியும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மார்ச் 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டிற்கு தமிழக அமைச்சரவையைக் கூட்டி ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்றுசெய்தியாளர்களைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளதால், தமிழக அரசு இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.