அடுத்த கட்டத்திற்கு செல்லும் உக்ரைன் போர்; ரஷ்யாவிற்கு ஆயுதம் வழங்கும் சீனா.!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்தது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்று ரஷ்யா தாக்குதலை சமாளிக்க அதிக ஆயுதங்களை வழங்குவதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ரஷ்யாவின் எல்லையில் நிறுத்த வேண்டும் என்பதற்காக உக்ரைன் மூலம் இந்த போரை அமெரிக்கா நடத்திவருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்தநிலையில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியை தடுக்க ரஷ்யாவிற்கு உதவ சீனா முன்வந்துள்ளது. அதன்படி ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்களை வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்த தகவல்களை உறுதிபடுத்தும் விதமாக அடுத்த ரஷ்யாவிற்கு சீன அதிபர் பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடதக்கது. சீனா அயுதங்கள் வழங்க உள்ளதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

ரஷ்யாவுக்கு ஆயுதம் வழங்கினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், “சீனா இராணுவ உதவியை வழங்குகிறதா என்பது பற்றி அதன் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால் அது அந்த வழியில் சென்றால் அது சீனாவிற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

அதேபோல், ‘‘சீனா ரஷ்யாவிற்கு காமிகேஸ் ட்ரோன்களை வழங்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஒரு அமைதி பேச்சுவார்த்தை நடத்த சீனா கோரிக்கை முன்வைக்கும் அதே நேரத்தில் ஆயுதங்களை வழங்க உள்ளது. சீனா தன் செயல்களால் மதிப்பிடப்படும், அதன் வார்த்தைகளால் அல்ல” என ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் கூறினார்.

இந்தநிலையில் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ இயக்குநர் வில்லியம்ஸ் பர்னஸ் நேற்று அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனை அடிபணியச் செய்யும் ராணுவ நடவடிக்கையில் அதிக நம்பிக்கையுடன் செயல்படுகிறார். உக்ரேனியர்களை நசுக்க முடியும் என்று புடின் நம்புகிறார், அவர் நமது ஐரோப்பிய நட்பு நாடுகளை களைக்க முடியும் என்றும் உறுதியுடன் இருக்கிறார்.

நாகையில் IFS,ARUTHURA போன்று அதிக வட்டி ஆசை காட்டி மோசடி; புகார்களால் திணறும் மாவட்ட நிர்வாகம்

உயிரிழப்புகள், தந்திரோபாய குறைபாடுகள், பொருளாதாரம் மற்றும் நற்பெயருக்கு சேதம் ஏற்பட்டாலும், போரைத் தொடர ரஷ்ய ஆதிபர் மிகவும் உறுதியாக இருக்கிறார். ஒரு கட்டத்தில், அவர் (புடின்) ரஷ்யாவின் சில ஏழ்மையான பகுதிகளுக்கு வீட்டிற்கு வரும் சவப்பெட்டிகளிலும் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உக்ரைனை ஆதரிப்பதற்கான அமெரிக்காவின் தீர்மானத்தை புடின் குறைத்து மதிப்பிடுகிறார்.

பிபிசி அலுவலங்களில் ரெய்டு; இங்கிலாந்து நாடாளுமன்றம் கண்டனம்.!

சீனா ரஷ்யாவிற்கு ராணுவ உதவியை வழங்குவது மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அத்தகைய நடவடிக்கை உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான உறவை மேலும் சீர்குலைக்கும். அதனால்தான் அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். சீன அதிபர் ஜி ஜின்பிங் போர் எவ்வாறு உருவானது என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். பல வழிகளில், அவர் பார்த்தவற்றால் அவர் அமைதியற்றவராகவும் நிதானமாகவும் இருப்பதாக நான் நினைக்கிறேன்” என்று பர்ன்ஸ் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.