கர்நாடக மாநிலத்தில் பஸ் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த் மனதில் நம்பிக்கையும், கண்களில் கனவுடனும் சென்னைக்கு வந்தார். கருத்த உருவம், பரட்டை தலை, இந்த மூஞ்சிக்கு எல்லாம் நடிக்கணுமா என அவர் காதுபடவே அசிங்கப்படுத்தினார்கள்.
அதை எல்லாம் கேட்டு வேதனைப்பட்டாலும், ஒரு நாள் பெரிய ஸ்டாராகி உங்களுக்கு என் செயலால் பதிலடி கொடுக்கிறேன் என தீர்க்கமாக இருந்தார் ரஜினி. தன் கடின உழைப்பால் முன்னேறி சூப்பர் ஸ்டார் ஆனார். பாலிவுட் சென்று இந்தி ரசிகர்களையும் தனது நடிப்பாலும், ஸ்டைலாலும் கவர்ந்தார்.
அன்றும், இன்றும், என்றும் ஒரே சூப்பர் ஸ்டார், அது ரஜினி தான் என ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு அனைவரின் அன்பையும் பெற்றிருக்கிறார். அவருக்கு 70 வயதானாலும் 20களில் இருப்பவர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கிறார்.
ரஜினி சார் மாதிரி வேகமாக நடக்க முடியாது என இளம் நடிகர்கள், நடிகைகளே சொல்கிறார்கள். அப்படிப்பட்ட ரஜினி தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஓய்வு எடுக்க முடிவு செய்திருக்கிறார்.
அவர் அப்படி முடிவு செய்ததில் தவறு இல்லை. ஆனால் மக்களை மகிழ்விக்கும் சேவையை செய்து வரும் ரஜினி இப்படி வீட்டோடு இருக்க வேண்டும் என்று கூறுவது ரொம்ப தப்பு. அவர் மக்களுக்காக கலை சேவை செய்ய வந்தவர். ஆண்டவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்திருக்கிறார்.
ரஜினி கடைசி வரை படங்களில் நடிக்க வேண்டும், அதை பார்த்து நாங்கள் ரசிக்க வேண்டும். ஓய்வு எடுக்க வேண்டும் என்கிற தன் முடிவை ரஜினி மாற்றிக்கொள்ள வேண்டும்.
70 வயதிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் போன்று வேறு யாராலும் முடியாது. அப்படி இருக்கும்போது நான் வீட்டிலேயே இருக்கப் போகிறேன் என ரஜினி சொல்லக் கூடாது. அவருக்கு எத்தனை வயதானாலும் திரையில் பார்த்து ரசிக்க காத்திருக்கிறோம்.
ரஜினி தன் கலை சேவையை தொடர வேண்டும். அதுவே எங்களின் விருப்பம் என்கிறார்கள் ரசிகர்கள். ரஜினிக்கு தன் பேரன்கள் யாத்ரா, லிங்கா, வேத், வீர் ஆகியோருடன் கூடுதல் நேரம் செலவிட ஆசையாக இருக்கிறதாம்.
Dhanush sons:மூத்த மகன் யாத்ரா அப்படியே ரஜினி மாதிரி, சின்னவரு தனுஷின் கார்பன் காப்பி
யாத்ரா, லிங்கா ஆகியோர் ரஜினியின் வீட்டிலேயே இருக்கிறார்கள். ஐஸ்வர்யா தன் கணவர் தனுஷை பிரிந்தபோது மகன்களுடன் அப்பா வீட்டிற்கு வந்துவிட்டார். பேரன்கள் தன் வீட்டிலேயே இருந்தாலும் அவர்கள் தங்களின் அப்பாவுடன் சேர்ந்து இல்லையே என்கிற வருத்தம் ரஜினிக்கு அதிகம் இருக்கிறதாம்.
கெரியரை பொறுத்தவரை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். பீஸ்ட் படத்தை இயக்கிய உடனேயே ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. ஆனால் பீஸ்ட் படம் கொடூர மொக்கை என்று விமர்சனம் எழுந்தாதல் ஜெயிலரில் நெல்சன் என்ன செய்திருக்கிறாரோ என ரசிகர்களுக்கு லைட்டா கவலையாக இருக்கிறது.
பீஸ்ட் போன்று ஜெயிலரில் எதுவும் சொதப்பலாக இருக்காது. அப்படி இருந்தால் ரஜினியே அந்த காட்சிகளை மாற்றுமாறு சொல்வார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். இது தவிர்த்து ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடிக்கிறார் ரஜினி.