ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் வினியோகித்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்களைர்களை கவர்வதற்காக அரசியல் கட்சியினர் பல்வேறு பரிசு பொருட்களை விநியோகித்ததாக புகார்கள் எழுந்தது.
எவர் சில்வர் தட்டு, எவர் சில்வர் குடம், பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு, பட்டு சேலை, பார்டர் வேட்டி, ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் கைகடிகாரம், ஸ்மார்ட் வாட்ச்,வெள்ளிக்கொலுசு, வெள்ளி காமாட்சி விளக்கு இப்படி நீண்ட பட்டியலின் இறுதி நாளான தேர்தலில், தாங்கள் சொன்ன சின்னத்துக்கு ஓட்டு போட்டு விட்டு திரும்புவோருக்கு ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாயை அள்ளிக்கொடுப்பதாக தகவல் வெளியானது.
குறிப்பாக அன்னை சத்யாநகர் பகுதியில் இந்த பண விநியோகம் நடப்பதாக புகார் எழுந்தது. அங்குள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு சென்று பார்த்த போது ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாயை, 500 ரூபாய் நோட்டுக்களாக ஒருவர் எண்ணிக் கொடுத்தது தெரியவந்தது.
ஒரு காலத்தில் ஓட்டுக்கு துட்டு வாங்குவது கவுரவக்குறைச்சலாக பார்க்கப்பட்ட நிலையில் , தற்போது ஓட்டுக்கு பணம் பெறவில்லை என்றால் கவுரவக்குறைசல் என்பது போன்ற நிலைக்கு வாக்காளர்கள் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.