திருமணத்திற்கு முன்பு மணப்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியை சேர்ந்த ஜினாபாய் ரதோட் என்பவரின் மகள் ஹீதலுக்கும், விஷால் என்பவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண நாளில் விழா சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென மணப்பெண் ஹீதல் மயங்கி விழுந்தார். இதனையடுத்து பதற்றம் அடைந்த குடும்பத்தார் உடனடியாக மணப்பெண்ணை மருத்துவரிடம் அழைத்து சென்றனர். பெண் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் இருவீட்டாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து மணமகனை திருமணம் நடத்தாமல் அனுப்பக்கூடாது என குடும்பம் மற்றும் சமுதாய உறுப்பினர்கள் முடிவெடுத்தனர்.
உயிரிழந்த மணப்பெண்ணுக்கு தங்கை இருந்ததால் அவரிடம் பேசி திருமணம் செய்து கொள்ள சம்மதம் பெற்றனர். உடனடியாக மரணமடைந்த பெண்ணின் தங்கை மற்றும் மாப்பிள்ளை விஷாலுக்கு திருமணம் நடத்தப்பட்டது.
திருமணம் முடியும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு இறுதி சடங்கு செய்யவில்லை. திருமணம் முடிந்த பின்னர் மரணமடைந்த பெண் ஹீதலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in