PS2: பொன்னியின் செல்வன் படத்தை இன்னமும் நல்லா எடுத்திருக்கலாம்..பிரபல நடிகர் ஓபன் டாக்..!

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் மணிரத்னம். தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் அனைவர்க்கும் இவரின் இயக்கத்தில் ஒரு படத்திலோ அல்லது ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என ஆசை இருந்து வரும் நிலையில் அது சிலருக்கு மட்டுமே நிறைவேறியுள்ளது.

மௌன ராகம் படத்தில் துவங்கி பல க்ளாஸான படங்களை இயக்கி தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார் மணிரத்னம். மேலும் அரவிந்த் சாமி, மாதவன், கௌதம் கார்த்திக் என பல தரமான நடிகர்களை உருவாக்கிய பங்கு இவருக்கு சேரும். அவ்வளவு ஏன் இன்று உலகளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்திய சிறப்பும் மணிரத்னத்தையே சேரும்.

Silambarasan: இது ஒர்கவுட் ஆகாது தலைவா..கௌதம் மேனனை எச்சரித்த சிம்பு..VTV கிளைமாக்ஸ் உருவான பின்னணி ..!

இந்நிலையில் இவ்வளவு பெருமைகளை உடைய மணிரத்னம் தன் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி வெளியிட்டார். எம்.ஜி.ஆர் மற்றும் கமல் ஆகியோர் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியை எடுத்து பின்னர் கைவிட்ட நிலையில் அம்முயற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார் மணிரத்னம்.

மொத்தம் இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியானது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் திரையில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்ற நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து பொன்னியின் செல்வன் படத்தால் ஏமாற்றமடைந்ததாக கூறியுள்ளார்.

கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கிய மாரிமுத்து தற்போது பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகின்றார். மேலும் இயக்குனர்கள் வசந்த், எஸ்.ஜெ.சூர்யா, மணிரத்னம் போன்ற இயக்குனர்களிடமும் உதவியாளராக பணியாற்றியுள்ளார் மாரிமுத்து.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் மாரிமுத்து பொன்னியின் செல்வன் படத்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை இன்னமும் நல்லா எடுத்திருக்கலாம் என எனக்கு தோன்றுகின்றது. படம் என்னை பொறுத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

பொன்னியின் செல்வன் கதையை அப்படியே மணிரத்னம் படமாக்கியுள்ளார். அதன் காரணமாக தான் என்னை பொறுத்தவரை படத்தில் சுவாரஸ்யம் குறைந்ததாக கருதுகின்றேன்.பொதுவாக நாவலை படமாக எடுக்கும்போது இந்த பிரச்சனை வருவது இயல்பான ஒன்றுதான் என்றார் மாரிமுத்து. இவ்வாறு . மாரிமுத்து வெளிப்படையாக தன் கருத்தை கூறியது பல ரசிகர்களால் ஆச்சர்யமாக பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.