கே.சி.பழனிசாமி இரங்கல்… ஓபிஎஸ்க்கு வந்த அவசர அழைப்பு- வேதனைப்பட்ட புகழேந்தி!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள். இவர் வயது மூப்பின் காரணமாக சமீபத்தில் காலமானார். இவருக்கு வயது 94. பழனியம்மாள் உடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்து விட்டு சென்றனர். நேற்றைய தினம் பெரியகுளம் பொது மயானத்தில் ஓபிஎஸ் தாயார் உடல் இறுதி சடங்குகளை அடுத்து தகனம் செய்யப்பட்டது.

பெரியகுளத்தில் இரங்கல்

இந்நிலையில் இன்றைய தினம் ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி, அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு சென்றிருந்தனர். அங்கு ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் இறப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

திடீர் தொலைபேசி அழைப்பு

இந்த இழப்பிற்கு ஆறுதல் சொல்லும் வகையில் நேரில் வந்துள்ளோம். அவரது தாயார் இழப்பிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதையடுத்து பேசிய புகழேந்தி, தாயார் மறைவிற்கு ஒருநாள் முன்பு சென்னையில் எங்களுடன் தான் இருந்தார். அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசிய உடன் கண்ணீர் சிந்தினார். உடனே நாங்கள் கேட்டோம்.

O.Panneerselvam Mother

நினைவு தப்பியது

தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்றாலும் கீழமை நீதிமன்றத்தில் இன்னும் வாதத்தை முன்வைக்கலாம். தைரியமாக இருங்கள் என்று சொன்னோம். அதற்கு தாயாரின் நினைவு தப்பி விட்டது. என்னை கூட அடையாளம் தெரியவில்லை. பார்ப்பவர்கள் யாரையும் அடையாளம் காண முடியவில்லை எனக் கூறி வேதனைப்பட்டார். அப்புறம் ஏன் விட்டு விட்டு வந்தீர்கள் எனக் கேட்டோம்.

தாயார் பழனியம்மாள் மறைவு

அதற்கு, தீர்ப்பு வந்த போது அங்கு சென்றுவிட்டால் ஓபிஎஸ் பயந்து கொண்டு தான் வரவில்லை எனக் கூறிவிடுவர் என்றார். அதன்பிறகு தேனி புறப்பட்டு சென்றார். திருச்சி வந்த போதே தாயார் மறைந்து விட்டதாக செய்து வந்தது. இது பேரிழப்பு. எடப்பாடி இப்படி நடந்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை. செய்தியாளர் ஒருவர் கேட்டதும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி மீது குற்றச்சாட்டு

நாமெல்லாம் ஒரு குடும்பத்தில் அரசியல் பயின்றோம். நமக்குள் பிரிவினைகள் இருக்கலாம். அதற்காக ஒரு தலைவரின் தாயார் இறந்த நிகழ்வை ஒருவரும் கண்டுகொள்ளாதது வேதனை அளிக்கிறது. இப்படிப்பட்ட அரசியலை நான் எங்குமே பார்த்ததில்லை.
எடப்பாடி பழனிசாமி
தாயார் இறந்த செய்தி கேட்டு ஓபிஎஸ் ஓடோடி வந்தார்.

Periyakulam

இனி மக்கள் கைகளில்

அங்கேயே இருந்தார். தற்போதைய சூழலை பார்க்கும் போது பிரிவினையை மிகவும் வலுவாக கட்டமைத்து கொண்டிருப்பது தெரிகிறது. சர்வாதிகார போக்குடன் எடப்பாடி செயல்படுகிறார். தற்போது துரோகிகள் திரும்பி கூட பார்க்கவில்லை. மக்கள் பார்த்து கொள்வார்கள். பெரிய அரசியல் மாற்றத்தை பார்க்கப் போகிறீர்கள் என்று புகழேந்தி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.