தம்பிக்கு பதில் தேர்வு எழுதிய அண்ணன் – கைதுக்கு பின் அவர் கொடுத்த விளக்கம் இருக்கே!

உத்தரப் பிரேதசத்தின் உன்னாவ் மாவட்டத்தில், உத்தரபிரதேச வாரியத்தேர்வில், கலை (Art) தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு செய்ததற்காக இளங்கலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர், ஷெர்பூர் காலன் பகுதியை சேர்ந்த ஷதாப் என அடையாளம் காணப்பட்டவர். 

கைதுசெய்யப்பட்டவர், தனது தம்பிக்கு பதிலாக தேர்வு எழுத வந்துள்ளதாக தெரிகிறது. தனது தம்பி வரையும் ஓவியம் “மோசமாக” இருப்பதால் அந்த தேர்வை தான் எழுத முயற்சித்ததாக கூறினார்.

உத்தரப் பிரதேசத்தின் முஸ்தபாபாத்தில் உள்ள சகுந்தலா தேவி காஷிராம் வித்யாலயா என்ற தேர்வு மையத்தில் அந்த தேர்வு நடைபெற்றது. அங்கு தேர்வறையில் ஷதாப் தேர்வு எழுதி வந்துள்ளார்.  தேர்வு தொடர்ந்து, சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, பறக்கும் படையினர் மையத்தை சோதனையிட்டனர்.

அவர்களின் ஆய்வின்போது, தேர்வாளர் முகீமுக்கு பதிலாக வேறு யாரோ தேர்வு எழுவதை அறிந்துள்ளனர். மாணவர் முகீமுக்கு பதிலாக ஷதாப் தேர்வெழுதுவதை குழு கண்டறிந்தை அடுத்து, ஷதாபா குற்றத்தை ஒப்புக்கொண்டு, தனது தம்பி வரையும் ஓவியும் மோசமாக உள்ளதாகவும், அதனால்தான் அந்த தேர்வை தான் எழுத வந்ததாகவும் கூறியுள்ளார். பறக்கும் படையினர் ஷதாப்பை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 

விசாரணைக்குப் பிறகு, தேர்வு மையப் பொறுப்பாளர் வர்ஷராணி மிஸ்ராவின் புகாரின் பேரில் ஷதாப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்பட்டதாக கோட்வாலி காவல் ஆய்வாளர் ஞானேந்திர சிங் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,”விசாரணைகள் நடந்து வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர் மீது மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

ஷதாப் தனது சகோதரருக்குப் பதிலாக வேறு ஏதேனும் தேர்வையும் எழுதியுள்ளாரா என்பதைக் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக மையப் பொறுப்பாளர் கூறினார். “சிசிடிவி காட்சிகளை சரிபார்ப்பதற்காக அதனை ஆய்வு செய்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.