ரஷ்மிகாவின் அரைகுறை ஆடை… வச்சி செய்யும் நெட்டிசன்கள்!!

விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நடிகை ரஷ்மிகா மந்தனா அணிந்து வந்த ஆடை குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்பே கீதா கோவிந்தம் மூலம் இவர் இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்று விட்டார். அதனால் இவர் நேஷனல் க்ரஷ் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.

இவரது நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூல் சாதனை படைத்தது. தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பிசியாக நடித்து வருகிறார். கடந்த வருடம் தெலுங்கில் ஆடவாலு மீக்கு ஜோகராலு, சீதா ராமம் ஆகிய படங்களும் ஹிந்தியில் குட் பை படமும் வெளியானது.

தற்போது அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் படத்தில் ராஷ்மிகா நடித்துவருகிறார். இந்நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ராஷ்மிகா கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார். ஹிந்தி நடிகை உர்ஃபி ஜாவேத்துக்கே ராஷ்மிகா டப் கொடுப்பார் போல என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.