சாதனைபடைத்த மாற்றுத்திறனாளிகளுக்கு கவின்கேர் விருதுகள்..!

அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் மாற்றுத்திறனாளி  சாதனையாளர்களை இந்திய மக்கள் அறிய வேண்டுமென்ற நோக்கத்துடன் கவின்கேர் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷன், ஒருங்கிணைந்து 21-வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள் (Cavinkare Ability Awards) 2023 என்ற நிகழ்வின் மூலம் அவர்களுக்கு வழங்கி   கௌரவித்திருக்கிறது.

வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு குறுக்கீடு செய்த தடைகளை தங்களது மனஉறுதியாலும், நம்பிக்கையாலும் உடைத்தெறிந்து, வெற்றி கண்டிருக்கின்ற ஐந்து சிறந்த மாற்றுத்திறனாளி சாதனையாளர்களுக்கு கௌரவம்மிக்க இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

Cavinkare Ability Awards 2023

இந்நிகழ்ச்சியில் காணொளி வழியாக ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்று, இந்நிகழ்ச்சியை நடத்தும் கவின்கேர் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷனையும் விருதுகளை பெற்ற சாதனையாளர்களையும் மனமார பாராட்டினார். 

தடைகளையும், சிரமங்களையும் தவிடுபொடியாக்கி சாதனைபடைத்த வெற்றியாளர்களை, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நடுவர் குழு தேர்வு செய்தது.

தக்‌ஷின் பாரத் பிராந்தியத்தின் தலைமை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் A. அருண், பிரபல இசைக்கலைஞர் சுதா ரகுநாதன், சன்மார் மேட்ரிக்ஸ் மெட்டல்ஸ் – ன் பிரசிடெண்ட் ஜார்ஜ் ராஜ்குமார், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தா மதன் கார்க்கி மற்றும் கிஸ்ஃபுளோ – ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் சுரேஷ் சம்மந்தம் ஆகியோர் இந்த நடுவர் குழுவில் இடம்பெற்றனர்.

Cavinkare Ability Awards 2023

இந்நிகழ்ச்சி குறித்து கவின்கேர் சி.கே.ரங்கநாதன் கூறுகையில், “கவின்கேர் எபிலிட்டி விருதுகள் என்ற இந்நிகழ்வு, செழுமையான 20 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து 21-வது ஆண்டில் நுழைந்திருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளில் தனிப்பட்ட சாதனையாளர்களை பாராட்டுவதும் மற்றும் அவர்களது பங்களிப்பை அங்கீகரிப்பதும் எங்களுக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பாகவும், கௌரவமாகவும் நாங்கள் கருதுகிறோம்.  நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல்வேறு வழிமுறைகளில் தங்களது அசாத்திய திறனை வெளிப்படுத்தியிருக்கும் தைரியமும், திறனும் கொண்ட இந்த சாதனையாளர்களை பார்ப்பது உண்மையிலேயே உத்வேகமளிக்கிறது.

இந்த விருது நிகழ்வில் பங்கேற்றிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் வெற்றிகரமான எதிர்காலம் அமைய வேண்டுமென்றும் மற்றும் அவர்களது எதிர்கால முயற்சிகள் சிறப்பான வெற்றியை அடைய வேண்டுமென்றும் நாங்கள் வாழ்த்துகிறோம்.” என்றார்.

எபிலிட்டி ஃபவுண்டேஷனின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான ஜெய்ஸ்ரீ ரவீந்திரன் கூறிகையில்,

தேசிய அளவிலான இவ்விருது கவின்கேர் எபிலிட்டி எமினன்ஸ் விருது மற்றும் கவின்கேர் எபிலிட்டி மாஸ்ட்டரி விருது என்று இரு வகைகளில் வழங்கப்படுகிறது.

Cavinkare Ability Awards 2023

நாடெங்கிலுமிருந்து விருதுக்காக 191  விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் எதிர்கொண்ட சிரமத்தின் அளவு, தடைகளின் மீது கண்ட வெற்றி மற்றும் சாதித்த பணியின் தனித்துவத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அவைகளிலிருந்து விருதுக்கான குறும்பட்டியலுக்கு சிறப்பான நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேற்குறிப்பிடப்பட்ட விருதுகளுக்கும் மேலாக, மிகச்சிறப்பான சாதனைகளை தனிநபராகவோ அல்லது ஒரு நிறுவன அமைப்பு வழியாகவோ செய்து, பரவலான அங்கீகாரத்தைப் பெற்று தலைவராக திகழும் ஊனமுற்ற ஒரு நபருக்கு “கவின்கேர் எபிலிட்டி சிறப்பு அங்கீகார விருது வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

கவின்கேர் எபிலிட்டி சிறப்பு அங்கீகார விருது

ஒரு பட்டயக் கணக்காளரான சங்கர ராமன், பல ஆண்டுகளாக அமர் சேவா சங்கம் என்ற அமைப்போடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டு புரட்சிகரமான புதிய பாதை படைக்கும் பல நடவடிக்கைகளை வெற்றிகரமாக அறிமுகம் செய்திருக்கிறார். 

கல்வியின் ஆற்றல் மீது வலுவான நம்பிக்கை கொண்டிருக்கும் இவர், ஒரு இளவயது சிறுவனாக தான் பெற்ற அதே வாய்ப்பை கிராமப்புறங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறார்கள் பெறுவதை உறுதி செய்வதை தனது வாழ்க்கையின் நோக்கமாகவும், செயல்திட்டமாகவும் கொண்டு செயல்பட்டுள்ளார்.

Cavinkare Ability Awards 2023

அவர்களுக்கு தொழிற்கல்வியை கற்பிக்கும் முயற்சிகளை அறிமுகம் செய்திருப்பதோடு, அனைவரும் தொடக்க நிலையிலேயே சமவாய்ப்புகளை பெறுகின்ற கல்வி நிலையமாக இச்சங்கம் செயல்படுகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஆதரவாக வும் கண்ணியத்தோடு நடத்தும் சமவாய்ப்புகளை வழங்குகின்ற ஒரு உலகை உருவாக்க வேண்டுமென்ற குறிக்கோளின் மீது அமர் சேவா சங்கத்தோடு சேர்ந்து, சங்கர ராமன் வலுவான பொறுப்புறுதியை கொண்டிருக்கிறார். இவருக்கு விழாவில் கவின்கேர் எபிலிட்டி சிறப்பு அங்கீகார விருது வழங்கப்பட்டது.

கவின்கேர் எபிலிட்டி எமினென்ஸ் விருது

கொல்கத்தா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் Dr. M.A. அபுல் ஹசன் சஹானி. இவர் மாற்றுத்திறனாளி மற்றும் பின்தங்கிய மக்களுக்காக இயங்கும் IHBP நிறுவனத்தின், நிறுவனர் – இயக்குனராக செயலாற்றி வருகிறார். 

IHBP என்பது, மாற்றுத்திறனாளி குழந்தைகள், பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய நபர்கள் மற்றும் சமூக – பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மக்களுக்காக உழைக்கும் ஒரு லாபநோக்கற்ற, சமயம் சாராத ஒரு தொண்டு நிறுவனமாகும். 

செவித்திறன் மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு நர்சரி, தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளிகளை இத்தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறது.  இன்றைக்கு மொத்தத்தில் 750 மாணவர்கள்  இக்கல்வி நிறுவனத்தில் கல்வி பயில்கின்றனர்.  சிறப்பு பாடத்திட்டங்களை கொண்டுள்ள இப்பள்ளிகளில், திறனும், பயிற்சியும் பெற்ற ஆசிரியர்களை உள்ளடக்கிய குழுவால் சிறப்பான கல்வி வழங்கப்படுகிறது. 

Cavinkare Ability Awards 2023

தங்களது அம்மாவிடமிருந்து பிறவி நோயாகப் பெற்ற தசை வலுவிழப்பு என்ற நிலையால் இவரும் மற்றும் இவரோடு உடன்பிறந்த சகோதர சகோதரிகளும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் டாக்டர். அபுல் ஹசன் சஹானி. 

எனவே, சிறுவயதிலிருந்தே மாற்றுத்திறனாளி நபர்கள் எதிர்கொள்கின்ற சிரமங்களை இவர் நன்கு அறிந்திருந்தார்.  இந்த புரிதலே ஊனமுற்ற நபர்களின் நலவாழ்விற்காக பாடுபடுவதை இவரது செயல்திட்டமாக மாற்ற வேண்டுமென்ற மனஉறுதியை இவருக்குத் தந்தது.  மாற்றுத்திறனாளி நபர்களை பொது சமூகத்தின் ஒரு அங்கமாக  சமவாய்ப்பும், திறனும் உள்ளவர்களாக மாற்றுவதற்கான பயனுள்ள வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்தும் பணியில் இவரை ஈடுபடச் செய்திருக்கிறது.

இவருக்கு விழாவில் கவின்கேர் எபிலிட்டி எமினென்ஸ் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது .

கவின்கேர் எபிலிட்டி மாஸ்டெரி விருது

ஒடிசா, புவனேஸ்வரிலுள்ள IMS & SUM மருத்துவமனையில் டாக்டர். சுஷ்ஸ்ரீ சாரங்கி, உட்சுரப்பியியல் துறையில் உதவி மருத்துவராக பணியாற்றி வருகிறார். 

இதே மருத்துவமனையில் இரண்டாவது ஆண்டு எம்பிபிஎஸ் மாணவராக இருந்தபோது ஒரு சாலை விபத்தின் காரணமாக, இடுப்பிற்கு கீழே உடலியக்க திறனிழப்பு இவருக்கு ஏற்பட்டது.  விபத்திற்கு பிறகு ஏற்பட்ட இப்பாதிப்பினால் கல்வியை தொடர்வது சாத்தியமற்றதாக தோன்றிய போதிலும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களது ஆதரவோடும், தனது சொந்த மனஉறுதியாலும், ஒரு மருத்துவராக ஆகவேண்டுமென்ற கனவை எப்படியாவது தடைகளை மீறி அடைய வேண்டுமென்ற நம்பிக்கையை இவரால் பெற முடிந்தது.

Cavinkare Ability Awards 2023

ஒரு மருத்துவராக தேர்ச்சி பெறுவதற்கான நான்கு ஆண்டுகள் பயணமானது எளிதானதாக இவருக்கு இருக்கவில்லை.  செய்முறை பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற தொடர்ந்து வகுப்புகளில் அமர முடியாத நிலை போன்ற பல்வேறு சவால்களை இவர் சமாளிக்க வேண்டியிருந்தது.

மருத்துவராக பணிபுரிவதென்பது ஒரு கடுமையான செயல்பாடாக இருக்கிற போதிலும், தான் தேர்வு செய்த துறையில் வெற்றி காண வேண்டுமென்ற கனவை டாக்டர். சுஷ்ஸ்ரீ பல தடைகளை தாண்டி நிஜமாக்கினார்.  மருத்துவத்தில் அல்லது அதை சார்ந்த மருத்துவம் அல்லாத பிரிவில் முதுகலை பட்டப்படிப்பை தொடரவேண்டுமென்பது இவரது இப்போதைய நோக்கமாக இருக்கிறது.  எதிர்காலத்தில் ஒரு ஆசிரியராக கல்விப்பணியை தேர்வு செய்யலாமா என்பதையும் இவர் தற்போது பரிசீலித்து வருகிறார்.

இவருக்கு விழாவில் கவின்கேர் எபிலிட்டி மாஸ்டெரி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது .

புனே, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ரசித் குல்ஸ்ரேஸ்தா ஒரு,  திறன் வாய்ந்த சைக்கிள் வீரராகவும், தீவிர சாகச ஆர்வலராகவும் இருக்கிறார்.  இருமுறை புற்றுநோயிலிருந்து பிழைத்திருக்கும் இவருக்கு ஒரு கை அகற்றப்பட்டிருக்கிறது.  எனினும், புதிய விஷயங்களை முயற்சிப்பதில் எப்போதும் ஆர்வம் கொண்டிருக்கும் ரசித், தனது கனவுகளை நிஜமாக்க தனது ஊனத்தை அனுமதிக்கக்கூடாது என்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

சைக்கிளிங் பற்றி பேரார்வம் கொண்டிருக்கும் இவர், மணாலியிலிருந்து கர்துங் லா என்ற இடம் வரை 10 நாட்கள் சைக்கிளிங் நிகழ்வு உட்பட, பல்வேறு சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.  இயற்கையை தான் ரசித்து அனுபவிப்பதைப்போல பிற மாற்றுத்திறனாளி நபர்களும் அந்த அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்காக தனது சைக்கிளிங் நிகழ்வுகளிலும் மற்றும் இயற்கையை ரசிக்கும் நடை பயணங்களிலும் அவர் உடன் அழைத்துச் செல்கிறார். 

Cavinkare Ability Awards 2023

சாகசம் மீதான இவரது பேரார்வம், சியாச்சின் அடிப்படை முகாம் வரை இவரை அழைத்துச் சென்றிருக்கிறது. மாற்றுத்திறனாளி நபர்களுக்கும் சமவாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வரும் இவர், மக்களுக்கு உத்வேகமளிக்க தனது வாழ்க்கை கதையை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் தங்களது தனித்துவ தன்மையை கைவிடாமல் முன்னேறிச் செல்ல தைரியத்தை வழங்கவும் பல்வேறு செயல்தளங்களை திறம்பட பயன்படுத்தி வருகிறார்.  ரசித் – ன் வாழ்க்கை, அவர் மீது பல தாக்குதலை தொடர்ந்து நடத்தியிருக்கின்ற போதிலும் கூட, வாழ்க்கையை முழுமையாக தான் வாழ்வதை தொடர்வதற்கு சரியான வழிமுறைகளை கண்டறிவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறார் மற்றும் அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். இவருக்கு விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது .

பீகார்,சமஸ்திபூரை சேர்ந்தவர் வித்யா குமாரி. இவர், ஆன்லைன் உணவு வழங்கல் செயல்தளமான ஸ்விகியில் ஒரு டெலிவரி பார்ட்னராக பணியாற்றி வருகிறார்.  ஒரு விபத்தால் பாதிக்கப்பட்ட இவர், மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி, உணவு டெலிவரியை மேற்கொண்டார். ஸ்விகி நிறுவனத்தில் பணியாற்றுவது மட்டுமின்றி, தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் வீராங்கனையாகவும் வித்யா திகழ்கிறார்.  பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் நம் நாட்டிற்காக தங்கப்பதக்கம் வெல்வது இவரது லட்சிய விருப்பமாக இருக்கிறது. 

Cavinkare Ability Awards 2023

இவருக்கு ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு வித்யாவின் பயணம், அவரது வறுமை, உடல் ஊனம் மற்றும் பாலினம் காரணமாக பல்வேறு சாவல்கள் நிறைந்ததாகவே இருந்த்து.  எனினும், அவரது மனஉறுதியையும், தைரியத்தையும் இச்சவால்கள்  தோற்கடிக்க இவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை;  சாதிக்க வேண்டுமென்ற கனவைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான தைரியத்தை இவர் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை.  இவரது சாதனைகளும், பயணமும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமன்றி, அனைவருக்குமே உத்வேகமளிப்பதாக இருக்கிறது.

இவர் தற்போது வசிக்கும் சண்டிகர் ஸ்பைனல் ரீஹாப் என்பதில் தங்கியிருக்கும் அனைவருமே பெரிதும் பாராட்டும் பண்பியல்பாக  இவரது எளிமை இருக்கிறது. இவருக்கு விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.