‘செல்ஃபி வித் சிஎம்’..முதல்வர் ஸ்டாலினுக்கு விஷ் பண்ணுங்க.!

தமிழ்நாடு முதலமைச்சரும்,
திமுக
தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு மார்ச் 1ஆம் தேதி 70 வயதாகிறது. முக ஸ்டாலின் தனது பிறந்தநாளை அரசியல் ரீதியாக கொண்டாட முடிவு செய்துள்ளார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் எதிர்கட்சிகளை ஒண்றினைக்கும் நடவடிக்கைகளை முதல்வர் முக ஸ்டாலின் மேற்கொள்ள உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில் பாஜகவை ஒன்றிய ஆட்சியில் இருந்து அகற்றியே ஆக வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். அதனால் தான் தன்னுடைய 70வது பிறந்தநாள் விழாவை அரசியல் ரீதியாக பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளார். அதன்படி நாட்டின் முக்கிய எதிர்கட்சி தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீரின் தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோருக்கு பிறந்தவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

அதேபோல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரையும் விழாவிற்கு அழைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் ஒன்றிய அரசை தீர்மானிக்கும் சக்தியாக திமுக இருக்க வேண்டும் என்பது முக ஸ்டாலினின் கனவாக உள்ளது. இந்த நிலையில், பிறந்தநாள் விழாவில் பொதுமக்களின் பங்களிப்பு இருக்கும் வகையில் திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு புதுமையான முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கட்சி தொண்டர்கள் மற்றும் மாநிலம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அவரின் நலம் விரும்பிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

போன் எ விஷ்:

07127 191333 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்யலாம். பிப்ரவரி 28 முதல் அதாவது நாளை முதல் வரும் மார்ச் 2 வரை இந்த தொலைபேசி இணைப்பில் வாழ்த்துகளை பதிவு செய்யலாம்.

எனக்கு அப்பறம் என் மகன் பெயரை தான் சொல்லுவேன் – SAC

செல்ஃபி வித் சிஎம்:

மெய்நிகர் சேவையை பயன்படுத்தி, முதலமைச்சர் உடன் புகைப்படம் எடுத்து பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவு செய்யலாம். www.selfiewithCM.com என்ற இணையதளத்துடன் QR குறியீடு இணைக்கப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு புகைப்படங்களோடு மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர் முறையில் செல்ஃபி எடுக்கலாம்.

அந்த புகைப்படத்தை தங்களது சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆகவும் வைத்து முதலமைச்சருக்கு வாழ்த்து சொல்லலாம். இந்த புதிய முயற்சியை திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி மேற்கொண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.