வீட்டுக்கு செல்லாமல் உழைத்தவரை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க்| Elon Musk fired the worker without going home

புதுடில்லி :மிகச் சிறப்பாக பணியாற்றுவதாக எலான் மஸ்க் பாராட்டிய பெண் அதிகாரி, இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.’டுவிட்டர்’ நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்திய போது, செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்.
அத்துடன் கடினமாக உழைக்க விரும்பாதவர்கள் பணியிலிருந்து வெளியேறலாம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த எஸ்தர் கிராபோர்ட் எனும் பெண் அதிகாரி, கடுமையாக வேலை செய்த நிலையில், ஓய்வு எடுக்க வீட்டுக்கு போகாமல், அலுவலகத்திலேயே தரையில் படுத்து தூங்கிய படம் ஒன்று டுவிட்டரில் வைரலானது.

இதைப் பார்த்து, எலான் மஸ்க், எஸ்தரை பாராட்டி பதிவிட்டார். இதன் தொடர்ச்சியாக, எலான் மஸ்க் உருவாக்கிய கடினமாக வேலை செய்யக்கூடிய அதிகாரிகள் குழுவில், எஸ்தரும் இணைந்தார். ‘டுவிட்டர் புளூ’ பிரிவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது எஸ்தரையும் பணிநீக்கம் செய்து, அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளார், எலான் மஸ்க். டுவிட்டர் புளூ குழுவில் பணியாற்றி வந்த 50 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார் எலான். இவர்களில் எஸ்தரும்
ஒருவர்.கடந்த ஆண்டு டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கும் போது, கிட்டத்தட்ட 7,000 ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர். அவர்களில் தற்போது 2,000 பேரைத் தவிர்த்து, 75 சதவீதம் பேர் பணி
நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.