சைலண்ட் மோடில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்; இனிமே ஒன்லி டிஜிட்டல்… ’நோ’ வாய்ஸ்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக சென்ட்ரல் ரயில் திகழ்கிறது. இதன் பெயரை கேட்டாலே சிவப்பு நிறத்தில் உயர்ந்து நிற்கும் கட்டிடம் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டு தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஏராளமான பிளாட்பாரங்கள் உடன் 200க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களை கையாண்டு வருகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

தினசரி 5.30 லட்சம் பேர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. பயணிகள் வசதிக்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. உள்ளே நுழைந்த உடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை தாண்டி பெரிய டிஜிட்டல் திரையை பார்க்கலாம். அதன் முன்பு ஏராளமான இருக்கைகள் போடப்பட்டு மக்கள் காத்து கொண்டிருப்பர்.

ரயில் பயண விவரங்கள்

தங்கள் ரயில் எப்போது வருகிறது, எந்த பிளாட்பாரம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும். இதுதவிர ஒலிபெருக்கி மூலம் ரயில்களின் வருகை, புறப்பாடு குறித்து தொடர்ந்து தகவல் தெரிவித்து கொண்டே இருப்பர். அதாவது, ரயில் எண், ரயிலின் பெயர், எத்தனை மணிக்கு வந்து சேரும், எந்த பிளாட்பாரத்தில் நிற்கும், எத்தனை மணிக்கு புறப்படும்,

ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு

தாமதம் ஏற்பட்டால் அதுதொடர்பான தகவல்கள் உள்ளிட்டவை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் இந்த சத்தத்தை கேட்காமல் இருக்க முடியாது. இது விவரம் தெரியாதவர்களுக்கு சரியான தகவலை சொல்லி அலர்ட் செய்து விரைவாக தங்களுக்கு உரிய பிளாட்பாரத்திற்கு செல்ல உதவிகரமாக இருக்கும்.

இனிமேல் டிஜிட்டல் திரை மட்டுமே

இந்நிலையில் ஒலிபெருக்கி மூலம் ரயில்களின் அறிவிப்பு இனிமேல் ஒலிபரப்பப்படாது என அறிவிக்கப்பட்டு நேற்று முதல் நடைமுறைக்கும் வந்துவிட்டது. இதனால் நாட்டிலேயே முதல்முறையாக அமைதியான ரயில் நிலையமாக சென்னை சென்ட்ரல் மாறியுள்ளது. இதற்கு அடைமொழி எல்லாம் கொடுத்து தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.

பயணிகளுக்கு வசதிகள்

இனிமேல் டிஜிட்டல் திரையில் மட்டுமே ரயில்கள் குறித்த தகவல்கள் தெரிந்து கொள்ளலாம். பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பலகைகள் வைக்கப்பட்டு, அதன்மூலம் பயணிகள் விவரங்களை அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் நிலையத்திற்கு முன்பாக பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம்,

கூடுதல் ஊழியர்கள்

புறநகர் ரயில் நிலையம், வால்டாக்ஸ் சாலை கேட் நம்பர் 5 ஆகிய பகுதிகளில் டிஜிட்டல் திரையை காணலாம். இவற்றில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் விவரங்கள் இடம்பெறும். அதேசமயம் தகவல் மையங்களில் இனிமேல் கூட்டம் அலைமோதும். எங்க ரயில் எப்ப வரும் சார்? எந்த பிளாட்பாரம் சார்? லேட்டா வருமா சார்? என கேள்விகளால் துளைத்து எடுத்து விடுவர். இதற்கேற்ப கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.