காய்கறிகள் கிடைக்காமல் தவிக்கும் பிரிட்டன் மக்கள்! கடும் தட்டுப்பாடு நீடிக்கும் நிலை!

பிரிட்டன் மக்கள் தற்போது தக்காளி, வெள்ளரி மற்றும் மிளகாய் போன்ற காய்கறிகளுக்கு கடும் பற்றாக்குறையை எதிர்கொண்டு, கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல பகுதிகளில் பல நாட்களாக காய்கறி கடைகளுக்கு தக்காளி வரவில்லை. எங்கு சென்றாலும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் ஆன்லைன் காய்கறி ஆர்டர்களை டெலிவரி செய்யும் பல இணையதளங்களில் தக்காளி விலை, இந்திய ரூபாயில்  கிலோ ரூ.400  என்ற அளவில் உள்ளது.

கடந்த வாரம் புதன்கிழமை, அனைத்து முக்கிய UK பல்பொருள் அங்காடி குழுக்களும் வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய சாலட்களின் எண்ணிக்கையில் சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. கீரை, தக்காளி, வெள்ளரிகாய், ப்ரோக்கோலி, குடை மிளகாய், காலிஃபிளவர் மற்றும் ராஸ்பெர்ரிகளுக்கு பிரிட்டனில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள காய்கறி அங்காடிகள் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளன. தக்காளி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட பொருட்கள் ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. 

இது குறித்து பிரிட்டன் உணவு வழங்கல் அமைச்சர் தெரேஸ் காபே என்பவர்  தக்காளி கிடைக்கும் வரை அதற்கு பதிலாக நூற்கோலை சாப்பிட்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் படி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து காபே மேலும் கூறுகையில், நாடு இந்த நெருக்கடியை சமாளிக்க கவனம் செலுத்தி வருகிறது. இந்த நேரத்தில், தக்காளி மற்றும் வெள்ளரிகள் தான் வேண்டும் என நினைக்காமல், இந்த சீசனில் இங்கிலாந்தில் ஏராளமாக கிடைக்கும் நூற்கோல் போன்ற பாரம்பரிய கிழங்குகளை சாப்பிடுவது நல்லது எனக் கூறினார். 

மேலும் படிக்க | NRI: பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?

குறைந்த உற்பத்திக்கான காரணம்

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் மின்சார கட்டண உயர்வால், பெரும்பாலான பசுமைக்குடில்களில் குளிர்காலத்தில் இந்தக் காய்கறிகளின் உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும், தெற்கு ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவிலிருந்து விநியோகம் குறைந்ததே இதற்குக் காரணம். பிரிட்டனின் தக்காளி தேவையில், 95 சதவிகித தக்காளி ஸ்பெயின் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆப்பிரிக்க நாடான மொரோக்காவும் பிரிட்டனின் முக்கிய இறக்குமதி  மையமாக உள்ளது. அங்கு ஏற்பட்ட புயல், ஒட்டு மொத்தமாக விளைச்சலை பாதித்துள்ள நிலையில், இதுவும் பிரிட்டனின் தட்டுப்பாட்டிற்கு காரணம் என கூறப்படுகிறது. 

பருவநிலை மாற்றம், எரிசக்தி விலையேற்றம், விநியோக சங்கிலியில் பிரச்னை ஆகியவை   தட்டுப்பாட்டுக்கு காரணமாக கூறப்படுகிறது.  ஆனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதே  (Brexit)இந்த தட்டுப்பாட்டிற்கு முக்கிய  காரணமாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Adani Group: பங்குச்சந்தையில் 1 ரூபாய் சம்பாதிக்க எவ்வளவு முதலீடு? அதானி பங்குவிலை சரியானதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.