பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி

பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சற்று முன்னர் கையெழுத்திட்டார்.

(235ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் படி, வரைவிலக்கணம் கூறப்பட்ட ஏதேனும் துறைமுகத்தினுள் இருக்கும் கலத்திலிருந்து உணவுப் பொருள் அல்லது பானம், அல்லது நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் என்பவற்றுள் எவற்றையும் வெளியேற்றுதல், கொண்டுசெல்லல், தரையிறக்குதல், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல், அகற்றுதல் என்பதற்காக, தெருக்கள், பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், புகையிரதப் பாதைகள் உட்பட தெரு மூலமான, புகையிரத மூலமான அல்லது வான் மூலமான போக்குவரத்துச் சேவைகளுக்கான வசதிகளை வழங்குதலும் பேணுதலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 President’s Media Division

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.