மெஸ்ஸியா? ரொனால்டோவா? FIFA விருதுகளை அதிகம் அள்ளியது யார்


கத்தார் கால்பந்து உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்கு வெற்றிக்கோப்பையை பெற்றுத்தந்த லியோனல் மெஸ்ஸி 2022ம் ஆண்டுக்கான FIFA விருதை தட்டிச்சென்றுள்ளார்.

ஆகச்சிறந்த ஆண் விளையாட்டு வீரர்

2022ம் ஆண்டுக்கான FIFA விருது பாரிஸ் நகரில் பிப்ரவரி 27ம் திகதி முன்னெடுக்கப்பட்டது. இந்த விவாழில் FIFA அமைப்பின் ஆகச்சிறந்த ஆண் விளையாட்டு வீரர் என்ற விருதை மெஸ்ஸி பெற்றுக்கொண்டார்.

மெஸ்ஸியா? ரொனால்டோவா? FIFA விருதுகளை அதிகம் அள்ளியது யார் | Messi Onaldo Fifa Best Football Awards

அத்துடன் ரொனால்டோ சாதனையை மெஸ்ஸி சமன்செய்துள்ளார். ரொனால்டோ இரண்டு முறை இந்த விருதை வாங்கியுள்ளார்.
ஆனால் அதிக எண்ணிக்கையில் FIFA விருதுகளை வாங்கியது மெஸ்ஸியா? அல்லது ரொனால்டோவா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

FIFA அமைப்பின் ஆகச்சிறந்த ஆண் வீரர் என்ற விருதினை தற்போது இருவரும் தலா இரண்டு முறை வாங்கியுள்ளனர்.
ஆனால் ஒட்டுமொத்த FIFA விருதுகள் என பட்டியலிட்டால், மெஸ்ஸி 17 விருதுகளை அள்ளியுள்ளார்.

மெஸ்ஸியா? ரொனால்டோவா? FIFA விருதுகளை அதிகம் அள்ளியது யார் | Messi Onaldo Fifa Best Football Awards

@getty

ரொனால்டோ 16 விருதுகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். சமீபத்தில் தான் மெஸ்ஸியின் PSG அணியும் ரொனால்டோவின் புதிய அணியான அல் நஸரும் நட்பு ரீதியான ஆட்டம் ஒன்றில் நேருக்கு நேர் மோதினர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.