மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கும் பணி: இன்றே கடைசி நாள்.. அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்!

இன்றே கடைசி நாள்:

தமிழகத்தில் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கரூரில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி:

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் மார்ச் 4 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 267 கோடி மதிப்பில் 1,22,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். பின்னர் திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுவதை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நேரில் பார்வையிட்டார்.

2000 கோடி ரூபாய் மதிப் திட்டங்களை தொடங்க உள்ளோம் – மா.சுப்ரமணியன்

கூடுதல் அவகாசம் வழங்கப்படாது:

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
“இதுவரை தமிழகத்தில் 2.67 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது. மீதம் 1.50 லட்சம் இணைப்புகள் இணைக்க வேண்டிய உள்ளது . இன்று மாலையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கான கால அவகாசம் நிறைவடைகிறது. ஏற்கனவே பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டதால் கூடுதல் அவகாசம் இனிமேல் தரப்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்தார். எனவே இன்று மாலைக்குள் தங்களது மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகள், விரைந்து ஆதார் எண்களை இணைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

குறுகிய காலத்தில் 2.67 கோடி பயனாளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஏற்கனவே இருந்த சிறு சிறு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு, இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் மின் சேவைகளுக்கான பயன்பாட்டில் எந்த குறைபாடும் இருக்காது.

திருவாரூரில் முதல் சூரிய மின் உற்பத்தி பூங்கா:

சூரிய மின்சக்தியில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக நேற்று அதிகபட்சமாக சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தியில் 6 ஆயிரம் மெகாவாட் தயாரிப்பிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூரில் முதல் சூரிய மின் உற்பத்தி பூங்காவை தமிழக முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மார்ச் 4 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 267 கோடி மதிப்பில் 1,22,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள்:

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 12 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்”.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.