சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். மேலும் திமுகவுடன் கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நாளை (மார்ச் 1ந்தேதி) மாநிலம் முழுவதும் திமுகவினரால் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், மார்ச் 1 மாலை 5.00 மணி அளவில் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதில் அகில […]