Oneplus 11 Concept போன் வெளியானது! அதிரடி கூலிங் டெக்னாலஜி உடன் புது போன்!

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடந்த உலக மொபைல் மாநாட்டில்
Oneplus நிறுவனம்
அதன் புதிய கான்செப்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய LED பின்னிஷ் செய்யப்பட்ட கான்செப்ட் போன் ஒன்றை Oneplus நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் ஸ்மார்ட்போன்களிலேயே முதல் முறையாக மிக விலை உயர்ந்த PC desktop பலவற்றில் பயன்படுத்தப்படும் Icy Cryogenic Liquid Flowing பேக் பேனல் வசதி கொண்டுள்ளது. இந்த புதிய டெக்னாலஜி Active CryoFlex technology என்று அழைக்கிறது. இந்த போனில் தனியாக லீகுய்ட் கூலிங் பம்ப் ஒன்று உள்ளதால் பேனல் சுற்றி போய்க்கொண்டே இருக்கும். இந்த போனை பயன்படுத்தி நாம் கேமிங் செய்யும்போது நமக்கு அதிகபட்சமாக 1.6 டிகிரி வெப்பத்தை குறைக்கும்.

இந்த ICE Cooling Pump போனின் பின்புறம் முழுவதுமாக செல்வதால் அதை பார்க்கும்போது ஒரு Halo Effect நமக்கு தெரியும். இது முழு Gamer போன் என்று அந்த நிறுவனம் அழைக்கிறது. Gaming Centric போன் என்பதாலும் Ice cooling technology வசதி இருப்பதாலும் இந்த போன் சிறந்த Fps மற்றும் சார்ஜிங் நேரம் கிடைக்கும்.

Oneplus நிறுவனம் சமீபத்தில் அதன்
Oneplus 11 போனை
புதிய Hasselblad கேமரா அம்சத்துடன் 56,999 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகம் ஆனது. இந்த போன் புதிய Qualcomm Snapdragon 8 Gen 2 Soc சிப் உள்ளது. இதனை அம்சங்கள் இருந்தும் இதன் விலை குறைவாகவே இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.