இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 'திரில்' வெற்றி..!

வெலிங்டன்,

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 435 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 209 ரன்னில் ஆல்-அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது.

இதனால் 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து இருந்தது. முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 25 ரன்னுடனும், ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 4-வது நாளான ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 162.3 ஓவர்களில் 483 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 258 ரன்களை வெற்றி இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்தது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில், இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் 258 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 256 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெலிங்டனில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 1 ரன்கள் வித்தியாசத்திக் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுத்தி 3 விக்கெட்களும், ஹென்றி 2 விக்கெட்களும், நீல் வாக்னர் 4 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.