வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கல்வித்துறை அமைச்சர் ஒருவர் மதுபான கொள்கை மோசடி வழக்கில் சிக்கி திகார் சிறை செல்வது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என சிசோடியா கைது குறித்து பா.ஜ., எம்.பி கவுதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.
புதுடில்லியில் மதுபான விற்பனை தொடர்பான கொள்கை, 2021-2022 நிதியாண்டில் திருத்தப்பட்டது. தனியாருக்கு மதுபான விற்பனையை அதிகளவில் வழங்கும் வகையில் இந்த கொள்கை அமைந்திருந்தது. இதில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரான, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம், எட்டு மணி நேரம் கிடுக்கிப்பிடி கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
பா. ஜ.,எம்பி விமர்சனம்:
இது குறித்து பா.ஜ., எம்.பி கவுதம் கம்பீர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: டில்லியில் அமைச்சர் சிசோடியா துறையை மீறி மதுபான கொள்கை மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். கல்வித்துறை அமைச்சர் ஒருவர் திகார் சிறை செல்வது நாட்டிலேயே இதுதான் முதல்முறை. சிசோடியா பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் திறந்து வைத்திருத்தால் அதனை காட்டுங்கள்.
மதுபானக் கொள்கையில் முரண்பாடு இல்லை என்றால், அதை திரும்பப் பெற்றிருக்கக் கூடாது. ஆனால் என்னை பொறுத்தவரை ஆம்ஆத்மியின் ஆட்சியின் குற்றசாட்டுகள் அம்பலமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement