வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒன்றாக, தொலைதொடர்பு துறை உருவாகி வருகிறது. இதனால் தொலைதொடர்பு துறை அமோக வளர்ச்சி பெற்றுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
10 ஆண்டுகளுக்கு முன் மொபைல் போன் தயாரிப்புக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது 99% பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறன.
இதனால் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ளது. இது பெரிய மாற்றம். நடப்பு ஆண்டில் மொபைல் சாதனங்களின் ஏற்றுமதி ரூ.82.640 கோடியாக இருக்கும்.
ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், ஏழை எளிய மக்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு சலுகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். நிறுவனங்களுக்கு கடனுதவி, மலிவு விலையில் சமையல் எரிவாயு, உணவு தானியங்கள் வழங்குவது, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
வரும் மழைக்கால கூட்டத்தொடரில் தொலைத்தொடர்பு மசோதாவை நிறைவேற்றுவதுதான் எங்களின் அடுத்த முக்கிய இலக்கு. இது ஸ்பெக்ட்ரம், உரிமங்கள், ஒழுங்குமுறை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பெரிய சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும்.
இந்தியாவில் முதலீட்டுக்கு ஏற்ற, வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒன்றாக, தொலைதொடர்பு துறை உருவாகி வருகிறது. இதனால் தொலைதொடர்பு துறை அமோக வளர்ச்சி பெற்றுள்ளது.
வரும் ஆண்டுகளில் மின்னணு உற்பத்தி, தொலைதொடர்பு துறைக்கான உற்பத்தி பன்மடங்கு வளர்ச்சி அடையும். இந்தியாவில் அனைத்து மொபைல் சாதன உற்பத்திக்கான பொருட்களும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement