சவால்கள், சாதனைகள் என படிப்படியாக உயர்ந்தவர் முக ஸ்டாலின்: கமல்ஹாசன்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு பயணம் பற்றி புகைப்படக் கண்காட்சி தொடக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இளமை காலம் முதல், திமுகவில் அவர் இணைந்த பின் படிப்படியாக அவர் செய்த சாதனைகள் குறித்த புகைப்படங்கள், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தனி சிறை அறையும் அமைக்கப்பட்டிருந்தது. 

புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்து வந்திருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் கருதி திறந்து வைத்திருப்பதாக தெரிவித்தார். 

கருணாநிதி மகன் ஸ்டாலின் என்ற காலத்தில் இருந்து அவருடன் எனக்கு நட்பு இருந்தது. அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இரண்டு பேரும் நட்பை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறோம் எனக் கூறினார்.

ஒரு மாபெரும் தலைவரின் மகனாக இருந்து அவர் செய்த சாதனைகள் ஒருபுறம் இருந்தாலும் அவர் அதனால் சந்தித்த சவால்களையும் இந்த புகைப்பட கண்காட்சி விளக்குவதாக தெரிவித்தார். கட்சியில் ஓர் சாதாரண தொண்டனாக இருந்து படிப்படியாக அவர் உயர்ந்ததை இந்த புகைப்பட கண்காட்சி விளக்குவதாகவும் தெரிவித்தார்.

தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுத கூடிய முயற்சிகளை தமிழர்களே சிலர் ஈடுபடுவதாக தெரிவித்த அவர், சரித்திரத்தை மாற்றி எழுத பலர் துடித்துக் கொண்டு உள்ளனர். அதற்கு சவால்விடுவது போல் நாம் சரித்திரத்தை நினைவு கொள்ள வேண்டும் என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியதற்கு தற்போது அதற்கான நேரம் இல்லை எனவும் எந்த ஒரு காட்சியும் படிப்படியாக நடந்தால் தான் சரியாக இருக்கும் என்றும், கிளைமேக்ஸை இப்போதே சொல்ல முடியாது எனவும் விளக்கம் அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.