நீலகிரி : கூடலூரில் மர்கஸ் ஜமாத் மூலமாக முஸ்லிம், இந்து, கிருஸ்துவ 400 ஜோடிகளுக்கு அவர்கள் மத வழக்கப்படி ஜமாத் மூலமாக திருமணங்கள் நடத்திவைக்கப்பட்டுள்ளது.
திருமண ஜோடிகளுக்கு தலா 5 பவுன் தங்க நகைகளும், ரொக்கம் ரூபாய் 25 ஆயிரமும் ஜமாத் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட எஸ்ஒய்எஸ் (மர்கஸ் ஜமாத்) அமைப்பு சார்பில் சார்பில் மணமக்களுக்கு இலவச சமுதாய திருமணங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று (27.02.2023) நடைபெற்ற ஐந்தாவது சமுதாய திருமண நிகழ்ச்சியில் முஸ்லிம், இந்து, கிருஸ்துவ ஆகிய மதங்களை சேர்ந்த 400 மணமக்களுக்கு இலவச சமுதாய திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இதில் 3 கிறிஸ்தவ மணமக்களுக்கும், 37 இந்து மணமக்களுக்கும், 360 இஸ்லாமிய மணமக்களுக்கும் அவரவர் மத முறைப்படி திருமணங்கள் நடைபெற்றது.
இலவச சமுதாயத் திருமணம் முடித்த 400 மணமக்களுக்கும் தலா 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம், உடைகள், தானிய பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.