கரூர்: கரூரில் ஒன்றிய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ் நேற்று அளித்த பேட்டி: இந்தியாவில் 100 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் கரூர் ரயில் நிலையமும் ஒன்று. கொரோனா காலத்தில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. இந்த சலுகை தொடர பரிசீலனை செய்யப்படும். கரூரில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
