திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக திருமலையில் ரூ50 முதல் ரூ7ஆயிரம் வரையிலான கட்டணத்தில் தேவஸ்தானம் சார்பில் அறைகள் உள்ளது இதில் 40 சதவீத அறைகள் ஆன்லைன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மீதமுள்ள அறைகள் நேரடியாக திருமலைக்கு வந்த பிறகு அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது இதுவரை இந்த அறைகளை பெறுவதற்கு பக்தர்களின் கைரேகைகளை பதிவு செய்து வழங்கப்பட்டு வந்தது
அவ்வாறு உள்ள அறைகளை இடைத்தரகர்கள் குறைந்த கட்டணத்தில் பெற்று அதிக கட்டணத்திற்கு பக்தர்களுக்கு விற்பனை செய்து வந்தனர் இதனை தடுக்கும் விதமாக திருமலையில் அறைகள் பெறும் பக்தர்களின் முகத்தை அடையாளம் காணும் விதமாக போட்டோ ஸ்கேனிங் மூலம் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது இதனால் அறைகள் பெற்ற பக்தர்களே இருந்தால் மட்டுமே காலி செய்யும் முடியும் அப்போது தான் அறைகளுக்கான முன்வைப்பு தொகை பக்தர்களுக்கு கிடைக்கும் இதனால் இடைத்தரகர்கள் மூலம் அறைகள் பெற்று பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க முடியும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்