மதுரை மாவட்டம், ராஜீவ் காந்தி நகர் பகுதியில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி உலகநெறியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலைச் செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் மாட்டுத்தாவணி காவல்துறையினர், கொலையில் தொடர்புடைய வினோத், மாரி, விஜயராகவன், சூர்யா, ஜெகதீஸ்வரன் ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், முதல் குற்றவாளியான வண்டியூரைச் சேர்ந்த வினோத் என்ற ரவுடியை கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியை அடையாளம் காட்டுவதற்காக காவல்துறையினர் அழைத்து வந்தனர். அந்த பகுதிக்கு சென்று அடையாளம் காட்டிய வினோத், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிவாளை எடுத்து காவலரை வெட்ட முயன்றார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் ஆய்வாளர், ரவுடி வினோத்தின் காலைத் துப்பாக்கியால் சுட்டார். பின் காயமடைந்து விழுந்த வினோத், ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.