சென்னை: தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடும் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்துக் கொண்டிருக்கின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்லாமல், உலகத்தலைவர்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக மற்றும் முதலமைச்சரின் நண்பர்கள், சினிமாத் துறையினர், தொழில்துறையினர் என பலரும் கலைஞர் கருணாநிதி மகன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திமுக தொண்டர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து பெறவிருக்கிறார் என்பதால், சென்னையில் கூட்டம் அலைமோதுகிறது. முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தின் அருகே மேல தாளத்துடன் அதிகாரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், மாற்றுக் கட்சியினராக இருந்தாலும், தெலுங்கானா மாநில ஆளுநர் திருமதி தமிழிசை சவுந்தர்ராஜன், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை வித்தியாசமாய் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
மக்களுக்கு
“தி”னமும்
“மு”ழு உடல் நலத்துடன்
“க”டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்….#HBDMKStalin70@mkstalin @CMOTamilnadu
(File Photo) pic.twitter.com/MOriEZhAJb— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) February 28, 2023
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…
மக்களுக்கு
“தி”னமும்
“மு”ழு உடல் நலத்துடன்
“க”டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்…. என்று தெலங்கானா முதலமைச்சர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்யும் திராவிட மாடல் நாயகன் தலைவர் தளபதியார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! என வாழ்த்துக்களை தெரிவித்திருப்பது திரு முக ஸ்டாலின் அவர்களின் அபிமானி திரு பொன்முடி அவர்கள்.
தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்யும் திராவிட மாடல் நாயகன் தலைவர் தளபதியார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!#HBDMKStalin70 @mkstalin. @arivalayam – @DMKITwing pic.twitter.com/cl4fORHBok
— Dr.K.Ponmudy (@KPonmudiMLA) March 1, 2023
அன்பு உடன்பிறப்புகளே! ஆடம்பரம் தவிர்த்து,எளியோர்க்கு நல உதவிகள் வழங்கி எனது 70வது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக்க நீங்கள் தரும் ஒத்துழைப்புதான் நான் பெறும் சிறந்த வாழ்த்து! என்று முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் அனைவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.