தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தனது 70 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதன் காரணமாக திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 70 பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.@CMOTamilnadu
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 1, 2023
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ’70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.