தானே, மஹாராஷ்டிராவில், 14 வயது மாணவனை அடித்ததாக எழுந்த புகாரையடுத்து, மதரசா பள்ளி ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மஹாராஷ்டிராவில் தானே மாவட்டத்தின் பிவாண்டி நகரில் மதரசா எனப்படும் இஸ்லாமிய மத கல்வியை கற்றுத் தரும் பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு கடந்த ஆண்டு நவ., மாதத்தில், 14 வயது மாணவன் ஒருவன், பாடத்தை மனப்பாடம் செய்யாததால், 32 வயதான ஆசிரியர் பிரம்பால் அடித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், இப்பள்ளியை நடத்தும் தர்காவில் முறையிட்டனர். இதையடுத்து தர்கா நிர்வாகி, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, மூன்று மாதங்களுக்குப் பின்தாமதமாக, நேற்று போலீசில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement