சென்னை:70வது பிறந்தநாளைக் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ 70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.