தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக இருக்கும் நடிகர் சித்தார்த், பிரபல நடிகை அதிதி ராவுடன் டேட்டிங் செய்து வருவதாக சமீப காலமாக சில கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது. திரையுலகில் இருவருமே திறமையான நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வரும் சித்தார்த் தற்போது காதல் வலையில் விழுந்துவிட்டதாக செய்திகளும் வெளியாகுகிறது. அஜய் பூபதி இயக்கத்தில் வெளியான ‘மகா சமுத்திரம்’ படத்தில் சித்தார்த்தும், அதிதி ராவும் இணைந்து நடித்தனர். இவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்லும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தது.
இந்நிலையில் சித்தார்த்தும், அத்தி ராவும் ஜோடியாக சேர்ந்து பிரபல ஹிட் பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘எனிமி’ படத்தில் இடம்பெற்ற ‘மால டும் டும்’ எனும் பாடல் படம் வெளியான சமயத்தில் ஹிட் ஆனது மட்டுமின்றி, இப்போது மறுபடியும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி பாடலை ட்ரெண்ட் செய்து வரும் நிலையில் தற்போது சித்தார்த்-அதிதி ராவ் நட்சத்திர ஜோடி ‘டும் டும்’ பாடலுக்கு நடனமாடி ட்ரெண்டாகியுள்ளனர். பாடலுக்கு நடனமாடிய வீடியோவை சித்தார்த்-அதிதி ராவ் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி ‘டான்ஸ் மங்கீஸ்-தி ரீல் டீல்’ என்கிற கேப்ஷனையும் சேர்த்து பதிவிட்டுள்ளனர்.
சித்தார்த்-அதிதி ராவ் நடனமாடும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடல் திருமணம் சமமந்தப்பட்ட பாடல் என்பதால் இருவரும் மறைமுகமாக தங்களது திருமணத்தை பற்றி தெரியப்படுத்துகிறார்களா என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்து வருகிறது. இதற்கு முன்னர் ஹைதராபாத்தில் நடைபெற்ற நடிகர் ஷர்வானந்தாவின் நிச்சயதார்த்த விழாவில் சித்தார்த்-அதிதி ராவ் நடனமாடிய வைரலானதை தொடர்ந்து தற்போது இந்த நடன வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது சித்தார்த், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மறுபுறம் அதிதி கைவசம், விஜய் சேதுபதி நடிக்கும் ‘காந்தி டாக்ஸ்’ படம் உள்ளது.