பிறப்புறுப்பு அகற்றப்பட்ட நோயாளிக்கு புதிய உறுப்பு பொருத்தி டாக்டர்கள் சாதனை| Doctors achieve feat by implanting a new organ in a patient who has had his genitalia removed

ஜெய்ப்பூர்ராஜஸ்தானில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றிய டாக்டர்கள், அவரது கையில் இருந்து தோல், ரத்த நாளம் மற்றும் நரம்புகளை எடுத்து, புதிதாக பிறப்புறுப்பு உருவாக்கி அதை அவருக்கு பொருத்தி சாதனை படைத்தனர்.

ராஜஸ்தானின் பண்டி என்ற இடத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். நோய் முற்றிய நிலையில் அவரது பிறப்புறுப்பை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள பகவான் மகாவீர் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, ஐந்து டாக்டர்களுடன் கூடிய 11 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிறப்புறுப்பை டாக்டர்கள் முதலில் அகற்றினர்.

அதன்பின், அவரது இடது கையில் இருந்து ரத்த நாளம், நரம்புகள் மற்றும் தோல் எடுத்து, பிறப்புறுப்பு உருவாக்கப்பட்டது. உடனே, அதை டாக்டர்கள் அறுவை சிகிச்சை வாயிலாக அவருக்கு பொருத்தினர்.

பிறப்புறுப்பை அகற்று வதில் இருந்து, மாற்று உறுப்பு பொருத்தப்படும் வரையிலான அந்த அறுவை சிகிச்சை நடைமுறைகள் 8 மணி நேரம் நடந்தன.

‘இந்த மாற்று பிறப்புஉறுப்பு வாயிலாக நோயாளி இயல்பு வாழ்க்கையை வாழ முடியும்’ என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.