Leo Vijay:லோகேஷ் கனகராஜுக்காக வயசுக்கு மீறின வேலை செய்யும் விஜய்: சூப்பர்ணா

மாஸ்டரை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. அந்த படத்தில் விஜய்க்கு ராசியான ஹீரோயினான த்ரிஷா நடிக்கிறார். ப்ரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திவிட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். லியோ படத்தில் 50 வயது கேங்ஸ்டராக நடிக்கிறார் விஜய் என தகவல் கசிந்தது. ஆனால் அந்த தகவல் உண்மை என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

48 வயதாகும் விஜய் 50 வயது நபராக நடிக்கிறார். லோகேஷ் கனகராஜுக்காக வயசுக்கு மீறிய வேலை செய்கிறார் விஜய். இதை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

லியோவில் விஜய்யின் மனைவியாக நடிக்கிறாராம் த்ரிஷா. அவர்களின் 15 வயது மகளாக பிக் பாஸ் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி நடிக்கிறாராம்.

ஓபனிங் காட்சியிலேயே த்ரிஷாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அதற்காக விஜய் பழிவாங்குவது தான் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வந்தார்கள். இந்நிலையில் விஜய்யின் குடும்பம் குறித்து தெரிய வந்த பிறகு மனதை மாற்றிக் கொண்டுள்ளனர்.

15 வயது மகளை கொன்றுவிடுவார்கள். அதற்காக விஜய் பழிவாங்குவது தான் லியோ படத்தின் கதை என்று ரசிகர்கள் புது கதை சொல்லி வருகிறார்கள். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள் நான் படப்பிடிப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறேன் என்று இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

லியோ படத்தில் வேலை செய்து வரும் லோகேஷின் நண்பர் ரத்னகுமாரை தான் விஜய் ரசிகர்கள் நம்பியிருக்கிறார்கள். அவரிடம் தான் அவ்வப்போது லியோ அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர் சும்மா ஒரு புகைப்படத்தை வெளியிட்டாலும் அது லியோ தொடர்பானது என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.

முதலில் விக்ரம் படத்தில் வந்த சந்தானம் விஜய் சேதுபதியின் கண்ணாடியுடன் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் ரத்னகுமார். அதை பார்த்தவர்களோ, அய்யய்யோ லியோ படத்திலும் விஜய் சேதுபதி இருக்கிறாரா என்றார்கள். அதன் பிறகே லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை, அதற்கு வாய்ப்பும் இல்லை என்று தெரிய வந்தது.

இதையடுத்து தான் ஒரு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் ரத்னகுமார். அதை பார்த்து ரசிகர்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியதாவது, மாஸ்டரில் பூனை வைத்திருந்தார் விஜய். லியோ படத்தில் நாயா, புரிந்துவிட்டது ரத்னகுமார் என்றார்கள்.

Leo Vijay: ரிலீஸுக்கு முன்பே ரூ. 400 கோடி வசூலித்த லியோ: விஜய் படம் புது சாதனை

இதற்கிடையே ரிலீஸுக்கு முன்பே லியோ படம் ரூ. 400 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி தளபதி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. படத்தின் தியேட்டர், டிஜிட்டல், இசை, சாட்டிலைட் உரிமைகள் ரூ. 400 கோடிக்கு சென்றிருக்கிறதாம்.

லியோ படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.