உஜ்ஜைன்,மத்திய பிரதேசத்தில், ௬௮ வயது முதியவர் மொபைல் போன் பேட்டரி வெடித்ததில் முகம் சிதறி இறந்திருக்கலாம் என, போலீசார் சந்தேக வழக்குப் பதிந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, உஜ்ஜைன் மாவட்டத்தில், பட்நகர் பகுதி யைச் சேர்ந்தவர் தயாராம் பரோட்டை, ௬௮, அவரது நண்பர் மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், முடியவில்லை. இதனால், நண்பர் நேராக வீட்டுக்கே சென்றுள்ளார்.
அங்கு, தயாராம் முகம் சிதறி சேதமடைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ஆய்வு நடத்தி, அவர் மொபைல் போனில் பேசிய போது, பேட்டரி வெடித்து முகம் சிதறி இறந்திருக்க வேண்டும் என்றனர்.
அவரது உடல் அருகே மொபைல் போன் பாகங்கள் சிதறிக் கிடந்தன. இது சம்பந்தமாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement