கோவை: மக்னா யானையை காட்டுக்குள் விரட்டும் வனத்துறையினரின் முயற்சியின்போது, மக்னா யானை ரயில் தண்டவாளத்தில் நின்றது. அப்போது வேகமாக ரயில் வருவதை அறிந்த வனத்துறையினர், சாதுரியமாக செயல்பட்டு, சத்தமிட்டு, மக்னா யானையை, ரயிலில் அடிபடாதவாறு, தண்டவாளத்தில் இருந்து நொடிப் பொழுதில் காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தர்மபுரி பகுதியில் விவசாய நிலங்களை பாழ்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியத்தைத் தொடர்ந்து, வனத்துநையினர் கும்கி உதவியுடன் மக்னா யானையை பிடித்து, ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் […]