மூன்று வருடங்கள் ஆன கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் :
2020-ல் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை பொறுத்தவரை இத்திரைப்படத்தின் கதாநாயகனான துல்கர் சல்மானுக்கு இத்திரைப்படம் 25-வது திரைப்படம் மேலும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகராக மாறிய திரைப்படம். திரைப்படம் வெளியான போது எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு சாதாரண திரைப்படம் போல் தான் வெளியானது. திரைப்படம் வெளியாகி தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் வர வர திரைப்படம் சூடுபிடிக்க தொடங்கியது.
சூப்பர் ஸ்டாருடன் கூட்டணியா..?
திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படக்குழுவினருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. மேலும் இத்திரைப்படம் வெளியான சில நாட்கள் கழித்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை தொலைபேசி மூலம் அழைத்து ‘’சூப்பர் டா கண்ணா ரொம்ப நல்லாருக்கு Sorry படம் லேட்டா பார்த்தற்கு’’ என்று கூறிய ஆடியோ மிகவும் வைரல் ஆனது. மேலும் இன்றைய ட்ரெண்டில் இருக்கும் காதல், Crime Partner போன்ற விஷயங்களை உள்ளடக்கிய இத்திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஒரு வெற்றி வந்த பிறகு அடுத்து என்ன என்ற கேள்வி வருவதும் இயல்பான ஒரு விஷயம் தான். அந்த கேள்வி தான் தேசிங்கு பெரியசாமிக்கும் வந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை இவர் தான் இயக்கவுள்ளார் என்ற செய்தி 3 வருடங்கள் ஆகியும் தொடர்ந்து வந்துகொண்டு தான் உள்ளது. ஆனால் இதுகுறித்து தேசிங்கு பெரியசாமியிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வந்ததில்லை.
தெலுங்கு சினிமாவின் விவேக்கிற்கு பிறந்தநாள்.. போஸ்டர் வெளியிட்ட ஜெயிலர் படக்குழு!
இரண்டாம் வெற்றி முக்கியம்..! :
ஒரு நடிகன் ஒரு திரைப்படத்தில் தோல்வி பெற்றால் அடுத்த திரைப்படத்தில் எளிமையாக எழுந்துவிடலாம். ஆனால் ஒரு தோல்விலிருந்து இயக்குனர் எழுவது என்பது சுலபமான விஷயம் இல்லை என்று நேர்காணல் ஒன்றில் நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு ஒரு தோல்விகளை கொடுக்காமல் இருப்பதற்கு நிதானம் மிகவும் முக்கியம் என்றும் அனைத்து இயக்குனர்களுக்கும் முதல் வெற்றியை விட இரண்டாம் வெற்றி என்பது மிகவும் முக்கியமான வெற்றியாக பார்க்கப்படும்.
உதாரணமாக லோகேஷ் கனகராஜ்-கைதி, நெல்சன் -டாக்டர், வினோத்- தீரன் அதிகாரம் ஒன்று, பிரதீப் ரங்கநாதன்- லவ் டூடே போன்ற திரைப்படங்களே ஒரு சான்று. அதுபோன்ற இரண்டாவது வெற்றிக்கு தான் தற்போது தேசிங்கு பெரியசாமி காத்திருந்து வருகிறார் என சினிமா விமர்சகர்கள் பலர் கூறி வருகின்றனர். மேலும் இயக்குனர் அட்லீ முதல் திரைப்படமான ராஜா ராணி திரைப்படத்திற்கு பிறகு இரண்டரை ஆண்டுகள் காத்திருந்து தளபதி விஜய்யுடன் தெறி வெற்றி கொடுத்தது போல தேசிங்கு பெரியசாமி அப்படி ஒரு காத்திருப்பில் தான் தற்போது உள்ளார் என்பது சினிமா ரசிகர்களின் கூற்றாக உள்ளது.