சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலமைச்சருக்கு அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை ஏராளமானோரில் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அறிவாலயம் வளாகத்தில் மரக்கன்று நட்டார். தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இன்று காலை தனது குடும்பத்தினர் முன்னிலையில், வீட்டில் கேக் வெட்டி மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டினார். அவருக்கு மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, […]