சூர்யா
முன்னணி நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா. நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சூர்யா பல போராட்டங்களை சந்தித்தார். தன் முதல் படத்தால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த சூர்யா தன் முயற்சியை மட்டும் கைவிடாமல் தொடர்ந்து போராடி வந்தார். அதன் பலனாக அவருக்கு நந்தா, பிதாமகன், காக்க காக்க என தொடர் வெற்றிகள் கிடைக்க தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாறினார்.=. அதன் பின் அயன், ஆதவன், சிங்கம் என கமர்ஷியல் வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் சூர்யா
காதல் சூர்யா நடிகை ஜோதிகாவை கடந்த 2006 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது தேவ், தியா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். ஆரம்பகாலகட்டத்தில் பல படங்களில் இணைந்து நடித்த சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலில் விழுந்தனர். பின்பு பல வருடங்கள் காத்திருப்பிற்கு பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவரின் திருமணமும் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினார். அதன் பின் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்
பிஸி சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து 2D என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கினர். ஆரம்பத்தில் ஜோதிகா நடித்து வந்த படங்களை மட்டும் தயாரித்து வந்த சூர்யா பிறகு தான் நடிக்கும் படங்களையும் 2D நிறுவனம் சார்பாக தயாரிக்க துவங்கினார். அதன் பின் மற்ற ஹீரோக்களின் படங்களையும் தயாரிக்க துவங்கிய சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பாளராக இருக்கின்றார். இந்நிலையில் தயாரிப்பு மட்டுமல்லாமல் சூர்யா பல வியாபாரங்களையும் செய்து வருகின்றார். மும்பை விமான நிலையத்தின் பார்க்கிங் ஏலத்தை எடுத்துள்ள சூர்யாவிற்கு செம லாபம் கிடைத்துள்ளது. மேலும் சில தொழில்களை மும்பையில் ஆரம்பிக்க இருக்கும் சூர்யா மும்பையில் ஒரு புதிய வீட்டை வாங்கி அதில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியேறிவிட்டார்
பிரிவு இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்கள் குழந்தைகளுடன் மும்பையில் குடியேறியது சிவகுமாருக்கு பிடிக்கவில்லை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். ஆரம்பத்தில் திருமணம் ஆன பின்பு ஜோதிகாவை நடிக்க வேண்டாம் என கட்டளையிட்டார் சிவகுமார். ஆனால் ஜோதிகா தற்போது நடித்து வருவது சிவகுமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இவ்வாறு இருக்க சூர்யா தன் குடும்பத்துடன் மும்பையில் குடியேறியது மேலும் சிவகுமாருக்கு ஆத்திரத்தை கிளப்பியுள்ளதாம். பாலிவுட் திரையுலகில் சூர்யாவை ஒரு முன்னணி நடிகராக மாற்றவேண்டும் என ஜோதிகா முடிவெடுத்துள்ளதால் இருவரும் தற்போது மும்பையில் குடியேறியுள்ளதாக ஒரு தகவல் வருகின்றன. மேலும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கும்போது மட்டும் சூர்யா தன் தந்தையுடன் தங்குவதாகவும், மற்ற நேரங்களில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் தான் வசிக்கிறார் என்றும், இதனால் சிவகுமார் அதிருப்தியில் இருக்கின்றார் என்றும் பயில்வான் யூடியூபில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது