நடிகை நயன்தாரா அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
nayanthara
நயன்தாராதமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நயன்தாரா. அதே ஆண்டில் அடுத்தடுத்து கஜினி, சிவகாசி என சூர்யா மற்றும் விஜய்யுடன் படங்களில் நடித்தார் நயன்தாரா. தொடர்ந்து கடந்த 18 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார். Selvaraghavan: எங்கே போய் தேடுவேன்… வேதனையில் இயக்குநர் செல்வராகவன்!
சிம்புவுடன் காதல்சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் நடிகர் சிம்புவை காதலித்தார் நயன்தாரா. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்த பிரபு தேவாவை காதலித்தார் நயன்தாரா. அவர்களின் காதல் திருமணம் வரை சென்றது. பிரபு தேவாவை திருமணம் செய்துகொள்வதற்காக சினிமாவில் இருந்தே ஒதுங்குவதாக அறிவித்தார் நயன்தாரா.
Radhika Sarathkumar: விஜய் அப்பாவுடன் ஜோடி சேரும் ராதிகா சரத்குமார்… லேட்டஸ்ட் தகவல்!
விக்னேஷ் சிவன்ஆனால் பிரபு தேவாவின் மனைவி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அடுத்தவர் கணவரை திருடுகிறார் நயன்தாரா என போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து பிரபு தேவாவுடனான காதலை முறித்துக் கொண்டார் நயன்தாரா. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார் நயன்தாரா. அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
Rachitha Mahalakshmi: வாவ்… ரச்சிதாவும் ஷிவினும் எங்கே போயிருக்காங்க பாருங்க…
திருமணம்இதையடுத்து இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சூர்யா, விஜய் சேதுபதி என பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
Dhanush: தாத்தா ரஜினியிடம் நெருங்கும் மகன்கள்… ஒதுங்கும் தனுஷ்?
குழந்தைகள்திருமணம் ஆன 4 மாதங்களில் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றதாக அறிவித்தனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. திருமணம் ஆனது முதலே ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி வருகின்றனர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும். அதோடு தொழில் ரீதியாகவும் இருவருக்கும் இறங்கு முகமாகவே உள்ளது.
Ajith: ரஜினியும் இல்ல… விஜய்யும் இல்ல.. இவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்… பற்ற வைக்கும் பாலிவுட் நடிகர்!
ஏகே 62 திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. அவர்களின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்கவில்லை. அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில் அந்தப் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.
கடைசி வரை ஸ்ரீதேவி பயந்தது இவருக்குதானாம்!
2 படங்களுக்கு 20 கோடிஇந்நிலையில் நடிகை நயன்தாரா அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு முன்னணி தயாரிப்பாளர் ஒருவரின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் நயன்தாரா கமிட் ஆகியுள்ளார். இந்த படங்களுக்கு தலா 10 கோடி ரூபாய் என மொத்தம் 20 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு அட்வான்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது.
Thunivu, Ajith: சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த துணிவு… உலக அளவில் வசூலை பாருங்க…
நயன்தாரா நீக்கம்ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கால்ஷீட் கொடுக்காமல் நடிகை நயன்தாரா இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் கடுப்பான அந்த தயாரிப்பாளர், நயன்தாரா உடனான 2 படங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளாராம். மேலும் நயன்தாராவுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையையும் திருப்பி வாங்கியிருக்கிறாராம். நயன்தாரா அடுத்தடுத்து இரண்டு படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.