ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. அடுத்த ஓரிரு மணி நேரத்தில் ஈரோடு கிழக்கில் யார் வெற்றி பெறப் போகிறார் என்பதும், அடுத்த சில மணி நேரங்களில் எவ்வளவு வித்தியாசம் வரும் என்பதும் தெரிந்து விடும்.
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? தேர்தல் முடிந்த உடனேயே அதிமுக தரப்பிலும், திமுக தரப்பிலும் முடிவு எப்படி இருக்கும் என்பது குறித்த ரிப்போர்ட்களை தங்களுக்கான சோர்ஸ்கள் மூலம் கேட்டுப் பெற்றுள்ளனர். இது குறித்து விசாரிக்கையில் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.
எடப்பாடிக்கு முதல் வெற்றி!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தமாகாவுக்கு கொடுக்காமல் நாம் போட்டியிடுவோம் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி துணிச்சலுடன் எடுத்ததற்கு தேர்தல் வரும் முன்னே வெற்றி கிடைத்தது. இடைத்தேர்தல் வந்தால் சின்னம் முடங்கி ஓபிஎஸ் ஆதரவை கோர வேண்டிய நிலை உருவாகும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றம் சென்று இரட்டை இலையை தனது அணிக்கு பெற்றார்.
கட்சியை கைப்பற்றிய எடப்பாடிடெல்லி வரை அவர் லாபி வேலை செய்ததன் விளைவாக இரட்டை இலை வேட்பாளருக்கு ஆதரவு என்று ஓபிஎஸ் சொல்லிவிட்டு விலகும் நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் அதிமுக பொதுக்குழு வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதால் இடைத்தேர்தல் வரும் முன்னரே அவருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துவிட்டது. அதாவது அதிமுக என்ற கட்சியின் ஒற்றைத் தலைமையாக அவர் வந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் எண்ணம் என்ன?ஒரே ஒரு தொகுதி இடைத்தேர்தல் முடிவால் சட்டமன்றத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது. இருப்பினும் ஆளுங்கட்சியோடு இத்தனை மல்லுக்கட்டு செய்ததற்குப் பின்னால் தனக்கு தான் தொண்டர்கள், பொது மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை காட்ட வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் எண்ணமே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
களத்திலிருந்து வந்த ரிப்போர்ட்!தொகுதியில் செல்வாக்கான வேட்பாளரை நிறுத்தியது, சாதி ரீதியான வாக்குகளை பெற முயற்சிகள் மேற்கொண்டது, ஆளுங்கட்சிக்கு நிகராக வாக்காளர்களை கவனித்தது என எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தீவிர கவனம் செலுத்தினார். தான் போட்ட உழைப்பெல்லாம் வாக்குகளாக மாறியுள்ளதா என்பதை அறிய நினைத்த எடப்பாடி பழனிசாமி தனது டீமை களத்தில் இறக்கியுள்ளார்.
தேர்தல் பணி எப்படி இருந்தது?ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகளைக் கொண்டு அவருக்காக ஒரு டீம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்குச் சாவடி வாரியாக தேர்தல் பணிகள் எப்படி நடந்தன, வாக்காளர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்ததா, அதிமுக முகவர்கள், நிர்வாகிகள் தேர்தல் பணிகளை எப்படி செய்தனர் என்பது குறித்து முழு விவரத்தை சேகரித்து எடப்பாடியிடம் கொடுத்துள்ளனராம்.
கீழ் வரை பாயாத ஸ்வீட் மழை!
அதிமுக நிர்வாகிகள் பல இடங்களில் சிறப்பாக செயல்பட்ட போதும் திமுகவினர் வாக்காளர்களை கவனித்த அளவு அவர்களால் கவனிக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் அதிமுகவில் மேலிருந்து கிளம்பிய ஸ்வீட் பாக்ஸ் விநியோகம் கீழ் வரை சரியாக சென்று சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
கௌரவமான முடிவு!அதிமுக வெற்றி பெற வாய்ப்பில்லை என்றாலும் மோசமான தோல்வியாக இருக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்தாலும் சுமார் 75 இடங்களை அதிமுக கூட்டணி பெற்றது. அதை போல் கௌரவமான முடிவாக தான் இருக்கும் என்று ஆறுதல் கூறப்பட்டுள்ளதாம்.
திமுகவுக்கு கிடைத்த ரிப்போர்ட்!திமுக தலைமைக்கு கிடைத்த ரிப்போர்ட்டில் வாக்கு வித்தியாசம் கட்சியினர் கூறுவது போல் ஆறு இலக்கத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. அதே சமயம் ஈரோட்டில் போட்ட உழைப்புக்கு நிச்சயம் நல்ல பலன் இருக்கும் என்கிறார்கள்.