Motorola Rizr Smartphone: உலகின் முதல் சுழலும் போன் கான்செப்ட் வெளியிட்டுள்ள மோட்டோரோலா!

உலகில் ஸ்மார்ட்போன்களில் பல வகையான டிசைன் கொண்ட போன்களை பல நிறுவனங்கள் அறிமுகம் செய்கின்றனர். புதிய வகை போனாக Motorola Rizr Rollable Concept ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போன் ஒரு 5 இன்ச் OLED ஸ்க்ரீன் உள்ளது.

இதன் போனின் பவர் பட்டனை நாம் இரு முறை தட்டினால் போதும் மாயாஜாலம் போல கிழே இருந்து புதிய ஸ்க்ரீன் ஒன்று வருகிறது. இதன் ஸ்க்ரீன் 5 இன்ச்சில் தொடங்கி 6.5 இன்ச் ஸ்க்ரீனாக உருமாறும்.

இந்த போனில் pOLED டிஸ்பிலே வசதி இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்க்ரீன் பயன்படுத்திவிட்டு நாம் மீண்டும் உள்ளே தள்ளலாம். நமக்கு நோட்டிபிகேஷன், கேமரா போன்றவை முக்கிய ஸ்க்ரீன் உள்ளே பார்க்கலாம்.

All Credits: Benwood

இந்த போனின் மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றாலும் இதை வைத்து Youtube, Gmail, Camera போன்றவை நாம் சிறப்பாக பயன்படுத்தலாம். உதாரணமாக நாம் வீடியோ ஏதாவது பார்த்துக்கொண்டிருந்தால் தானாகவே அது ஸ்க்ரீன் அளவிற்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்ளும்.

Gmail பயன்படுத்தினால் நமக்கு கூடுதல் ஸ்க்ரீன் மிகவும் உதவியாக இருக்கும்.இதேபோல நாம் பின்பக்க கேமரா பயனப்டுத்தினால் பின்பக்கமாக இருக்கும் 5 இன்ச் ஸ்க்ரீன் நாம் எடுக்கும் புகைப்படத்தை குறித்த படங்களை காட்டும்.

இந்த போனில் OLED டிஸ்பிலே, டூயல் ரியர் கேமரா வசதி, type c சார்ஜிங், சிறந்த பயனஅனுபவம் தரும் சுத்தமான Android மென்பொருள், 210g இருக்கும் எடை குறைவான பாடி இதில் உள்ளது. இருந்தாலும் இது நாம் முழுவதும் மடித்தபிறகு கிழே விழுந்தால் நேரடி பாதிப்புகள் மிகப்பெரிய அளவு இருக்கும். இதற்கு தனியாக ஏதாவது பாதுகாப்பு கேஸ் இருக்கும் என்று தெரிகிறது.

இது ஒரு கான்செப்ட் போன் என்பதால் இதை பற்றி நாம் பெரிதாக கவலைப்படத்தேவையில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற போன் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டமாகவே இந்த ஸ்மார்ட்போன் பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.